Road Side Kalan: சுவையான ரோட்டுக்கடை காளான் செய்வது எப்படி?.. மழைக்கு இதமாக வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!

Road Side Kalan Recipe: ரோட்டுக்கடை ஸ்டைல் காளானை வீட்டிலேயே சுவையான முறையில் செய்வது எப்படி? என இந்த பதிவில் காணலாம்.

Road Side Kalan (Photo Credit: YouTube)

நவம்பர் 10, சென்னை (Chennai News): காளானில் கிரேவி, சுக்கா, மிளகு மசாலா உள்ளிட்டவைகளை வீட்டிலேயே செய்து உண்டிருப்போம். என்ன தான் அதையெல்லாம் சாப்பிட்டாலும் ரோட்டு சைடு காளானுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்று தான் கூற வேண்டும். கடைகளில் புட் கலர் போன்றவை சேர்ப்பதால் உடலுக்கு கேடு என சாப்பிடுவதை தவிர்த்திருப்போம். மழைக்கு இதமாக வீட்டிலேயே என்றவாது ஒரு நாள் செய்து சாப்பிடுவதில் தவறில்லை. தினமும் சாப்பிடுவது தான் தவறு. இந்த பதிவில் சுவையான ரோட்டுக்கடை காளானை வீட்டிலேயே எப்படி செய்வது என காணலாம். Health Warning: உடலுக்கு ஆபத்து.. இந்த காய்கறிகளை சமைக்கும்போது கவனம்.. மழைக்கால எச்சரிக்கை.! 

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - தேவையான அளவு

முட்டைகோஸ் - 1

காளான் - 1 பாக்கெட்

மைதா - 100 கிராம்

சோள மாவு - 50 கிராம்

வெங்காயம் - 5

தக்காளி - 1

இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கொத்தமல்லி, கருவேப்பிலை - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

  • முதலில் முட்டைகோஸ், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் மற்றும் காளானை பொரியலுக்கு வெட்டுவது போல சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்த முட்டைகோஸ் மற்றும் காளானை சேர்த்து அதனுடன் மைதா, சோள மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.
  • இவை ஒரு 5 முதல் 10 நிமிடத்திற்கு ஊற வேண்டும். நன்கு ஊறியதும் வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிய சிறிய உருண்டைகளாக பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்ததாக மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
  • இவை நன்கு வதங்கி பொன்னிறமானதும் அதனுடன் சிறிதளவு சோளமாவு கலந்து ஊற்றவும். பின் அடுப்பை சிம்மில் வைத்து கொதி வந்ததும் பொரித்து வைத்த காளானை சேர்த்து கிளறவும். இறுதியாக கொத்தமல்லி தூவி அதனுடன் பொரித்த கார்ன் சேர்த்து வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement