World Beautiful Places: கட்டாயம் உலகளவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் இதுதான்.. லிஸ்ட் ரெடி., கிளம்புங்க மக்களே..!

உலகில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. இவற்றில் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த தகவலை இனி காணலாம்.

Template: Paris France, London England, Maldives, Rome Italy

டிசம்பர், 9: உலகில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல சுற்றுலாத்தலங்கள் (World Most Favorite Places to Visit) இருக்கின்றன. இவற்றில் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த தகவலை இனி காணலாம்.

பாரிஸ், பிரான்ஸ் (Paris, France):  பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பாரிஸ் நகரம் உலகின் காதல் சின்னமாக விளங்குகிறது. இங்குள்ள வரலாற்று நினைவு சின்னங்கள், அரண்மனைகள், இயற்கை தோட்டங்கள், ஈபிள் கோபுரம் போன்றவை கண்களை கவரும் சுற்றுலாத்தலமாகும். ஈபிள் கோபுரம் உலகளவில் அதிக போட்டோ எடுக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும்.

இலண்டன், இங்கிலாந்து (London, England): இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டன் நகரம், ஐரோப்பிய நாடுகளில் அதிகளவு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நகரமாகும். அரச குடும்பத்தின் தாயகமாகவும், வளமான வரலாறு கொண்ட சுற்றுலா தலமாகவும் இலண்டன் இருக்கிறது. பூங்கா, கலாச்சார கண்காட்சி, பக்கிங்ஹாம் அரண்மனை போன்றவை பார்வையாளர்களை கொள்ளைகொள்ளும்.

London, England

மாலத்தீவுகள் (Maldives): நீல நிற நீரினால் கடல் சூழ, ஊசலாடும் பனை மரங்கள், வெண்ணிற மணல், பவளத்தீவுகள் கொண்ட அழகிய இடம் மாலத்தீவுகள். இங்குள்ள இதமான வானிலை காரணமாக தேனிலவுக்கு புகழ்பெற்ற இடமாகவும் அது அமைந்துள்ளது. 99 % நீர் கொண்ட மாலத்தீவின் அழகை வருணிக்க வார்த்தைகள் போதாது. Avoid Mosquitos: கொசுக்களின் தொல்லை உங்களின் வீட்டில் அதிகரித்துவிட்டதா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

ஐஸ்லாந்து (Island): நெருப்பு & பனிக்கட்டி தீவக இருக்கும் ஐஸ்லாந்து, சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை கவர்ந்திழுக்கும் இடமாகும். இங்குள்ள எரிமலை காண்போரை வியக்கவைக்கும். ஐஸ்லாந்தில் திமிங்கலம் அதிகம் என்பதால், அதனை எளிதில் காணலாம்.

Island Country

நியூயார்க், அமெரிக்கா (Newyork, America): அமெரிக்காவில் இருக்கும் உலகபுகப்பெற்ற நியூயார்க் நகரம் சுற்றுலாத்தலமாகவும், கலாச்சார மையமாகவும் இருக்கிறது. இங்குள்ள லிபர்டி சிலை, எம்பயர் ஸ்டேட் கட்டிடம், டைம்ஸ் சதுக்கம் உட்பட பல இடங்கள் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

ரோம், இத்தாலி (Rome, Italy): கலைப்பொக்கிஷம், தொல்பொருள் போன்ற விஷயங்களுக்கு புகழ்பெற்ற ரோம், கலாச்சாரத்தை அறிந்துகொள்ள ஆர்வமூட்டும் பகுதி ஆகும். ரோமானிய கடவுளின் கோவில், பண்டைய மக்களின் எஞ்சிய விளிம்பு காட்சிகள் என வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இடங்கள் அதிகளவில் விரும்பப்படும் இடங்களில் ரோம் ஒன்றாகும்.

மசாய் மாரா, கென்யா (Kenya): வனவிலங்குகளை நேரில் பார்க்க, அழகிய சபாரி மேற்கொள்ள அட்டகாசமான இடம் மசாய் மாரா. கென்யாவில் இருக்கும் மசாய் மாரா சிங்கத்தின் இராஜ்யம் ஆகும். அதனைப்போல, இவ்விடம் மில்லியனுக்கும் அதிகமான காட்டெருமைகள், வரிக்குதிரைக்கு புகழ்பெற்ற இடமாகும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 11:56 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement