Miladi Nabi 2024: மிலாடி நபி 2024.. வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரியுமா..?!

இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான மிலாடி நபி பண்டிகையின் சிறப்புகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Miladi Nabi 2024 (Photo Credit: Team LatestLY)

செப்டம்பர் 13, சென்னை (Festival News): இஸ்லாமிய இறை தூதரான முகமது நபிகள் நாயகத்தின் (Mohammad Nabigal Nayagam) வாழ்க்கையை நினைவுப்படுத்தும் விதமாக அவர் கடைபிடித்த ஒழுக்க நெறிகளின் வழியிலேயே மற்றவர்களும் நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் மிலாடி நபி (Miladi Nabi) கொண்டாடப்படுகின்றது. இந்த 2024-ஆம் ஆண்டு மிலாடி நபி திருநாள் (Eid Milad un Nabi) எப்போது கொண்டாடப்படுகிறது? அதன் முழு விவரங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மிலாடி நபி - பெயர் காரணம்:

அரபு மொழியில் மெளலித் (Mawlid) என்றால் பெற்றெடுத்தல், கருத்தரித்தல் , வம்சாவளி என்று பொருள்படும். இந்த சொல் எகிப்து போன்ற சில பகுதிகளில் முக்கியமான வசனமாக கருதப்படுகின்றது. இஸ்லாமிய இறை தூதரான முகமது நபிகளின் பிறந்த நாளையே மிலாடி நபி திருநாளாக கொண்டாடுகிறார்கள். முகமது நபி, கி.பி. 570-ஆம் ஆண்டு ரபி உல் அவல் மாதத்தில், இஸ்லாமிய நாட்காட்டியின் 3-வது மாதத்தின் 12-ஆம் நாளில் மக்கா (Makkah) நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாடி நபியாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். International Chocolate Day 2024: சாக்லேட் பிடிக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களா?.. உங்களுக்கு பிடித்த சாக்லேட்... இன்று உலக சாக்லேட் தினம்.!

மிலாடி நபி பண்டிகை:

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி ஆகும். ரம்ஜான், பக்ரீத் தினங்களுக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்கள் மிகவும் புனிதமான நாளாக கருதுவது மிலாடி நபியை தான். இஸ்லாமியர்களின் மற்ற பண்டிகை மற்றும் வழிபாட்டு நாட்களை போலவே, பிறை தெரிவதன் அடிப்படையிலேயே இதனை கொண்டாடுகின்றனர். மிலாத்-உன்-நபி, மீலாதுன் நபி என பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

மிலாடி நபி, சன்னி மற்றும் சியா முஸ்லீம்களால் (Shia Muslims)கொண்டாடப்பட்டாலும், சியா முஸ்லீம்கள் தங்களின் 6-வது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும், முகமது நபிகளின் பிறந்த நாளும் ஒன்றாக வருவதாக கருதி ரபி உல் அவ்வல் மாதத்தின் 17-வது நாளில் இந்த நாளை கொண்டாடுகிறார்கள். அதேபோல சன்னி முஸ்லீம்கள் (Sunni Islam), ரபி உல் அவ்வல் மாதத்தின் 12-வது நாளில் மிலாடி நபியை கொண்டாடுகின்றனர்.

மிலாடி நபி நாள் விவரம்:

இந்த 2024-ஆம் ஆண்டு மிலாடி நபி திருநாள், செப்டம்பர் 16-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பிறை தெரியாததன் காரணமாக தற்போது செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார். இதனால், தமிழக அரசின் பொது விடுமுறை தினமும் செப்டம்பர் 17-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நாளில் முகமது நபியின் போதனைகளை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பது மிக முக்கிய கடமையாகும். பெரும்பாலான இஸ்லாமியர்கள் நோன்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். முகமது நபிகளை நினைத்து சிறப்பு தொழுகைகள் நடத்தி, அன்புடன் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.