International Chocolate Day (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 13, புதுடெல்லி (Special Day): சாக்லேட் என்றால் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு இது. அது மட்டுமல்லாமல் சாக்லேட்டை சுவைக்கும்போது மனதில் இன்பமான நினைவுகள் அலைமோதும். ஆக, இந்த நாளை நீங்கள் தவறவிட வேண்டாம். உலகம் எங்கும் செப்டம்பர் 13-ஆம் தேதி சர்வதேச சாக்லேட் தினமாக (International Chocolate Day) அனுசரிக்கப்படுகிறது. மில்டன் எஸ் ஹெர்ஷே என்பவர் கார்மல் கேண்டி என்னும் சாக்லேட்டை முதன்முதலாக கண்டுபிடிக்கிறார். தொடர்ந்து அந்த சாக்லேட்டிற்கு 1990-ம் ஆண்டு புது வடிவம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் இவருடைய பிறந்தநாளை தான் சாக்லேட் தினமாக கொண்டாடுகின்றனர்.

சாக்லேட் வகைகள்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சாக்லேட்டில் பல வகைகள் உள்ளன. மில்க் சாக்லேட் (Milk chocolate), ஒயிட் சாக்லேட் (White chocolate), டார்க் சாக்லேட் (Dark chocolate), செமி ஸ்வீட் சாக்லேட் (Semi sweet chocolate), பிட்டர் ஸ்வீட் சாக்லேட் (Bitter sweet chocolate), பேக்கிங் சாக்லேட் (paking chocolate), கொக்கோ பவுடர் (Cocoa powder), ஸ்வீட் ஜெர்மன் சாக்லேட் (Sweet German chocolate), கவெர்சூர் சாக்லேட் (Couverture chocolate), ரூபி சாக்லேட் (Ruby chocolate) மற்றும் பல வகைகள் உள்ளன. Red Sandalwood: சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த சந்தனம் எப்படி பயன்படுகிறது? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!

சாக்லேட் நன்மைகள்: தொடர்ந்து சாக்லேட் சாப்பிடுவதால் பக்கவாத பாதிப்பை 21% இதயம் தொடர்பான நோயில் இருந்து 29% இருதய நோயால் உயிரிழப்பிலிருந்து 45 சதவீதமும் பாதுகாப்பு கிடைக்கிறது என மருத்துவர் ரீதியான ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் டார்க் சாக்லேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகின்றனர். மேலும் டார்க் சாக்லேட்டில் காணப்படும் பிளாவனாய்டுகள் பல் சேதத்தினை குறைத்து, ஈறு ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவுகின்றன. அதே நேரத்தில் இவற்றினை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது பல் சேதத்திற்கும் வழி வகுக்கின்றன.