Benefits of Wearing a Sports Bra: மார்பகங்கள் தொய்வா? அப்போ ஸ்போர்ட்ஸ் ப்ரா ட்ரை பண்ணுங்க..!

பிரா என்றும் பிரெசியர்ஸ் என்றும் இன்னும் பலவிதமான பெயர்களில் பெண்களின் உடைகளில் ஒரு பிரிக்கமுடியாத ஒன்றாக நீடித்திருக்கிறது இந்த ஆடை.

Sports Bra (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 15, புதுடெல்லி (New Delhi): 30 வயதைக் கடந்த பெண்களுக்கு மார்பகங்கள் தொய்வாக காணப்படும். இது வயதாவதாலும், பாலூட்டுவதாலும், சரியான உடற்பயிற்சியின்மையாலும் இது ஏற்படும். மற்றும் இளம் வயது பெண்களில் பெரிய அளவில் மார்பகங்கள் உள்ளவர்களும், அதிக எடை கொண்டவர்களுக்கும் வேகமாக தொய்வு ஏற்படும். இதனால் அவர்களால் வேகமாக நடக்கவோ, ஓடவோ, நடனம் ஆடவோ சங்கடத்தை சந்திப்பார்கள் சிலருக்கு மார்பகம் மற்றும் முதுகு வலி ஏற்படும். இவர்கள் மட்டுமின்றி அனைத்து வகையான பெண்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் போது ஸ்போட்ஸ் பிராவைப் (Sports Bra) பயன்படுத்துவது மிகச் சிறந்தது.

ஸ்போர்ட்ஸ் ப்ரா பயன்கள்: விளையாட்டு, நடனம், உடற்பயிற்சி, போன்ற நேரங்களில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதால், மார்பகங்களின் அளவைப் பராமரிக்கிறது. உடற்பயிற்சியில் மார்பகங்கள் விரிவடைவது கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இது இறுக்கமாக இருப்பதால், மார்பகங்களில் வடிவங்களையும் மாற விடாமல் பாதுகாக்கிறது. உடற்பயிற்சி செய்கையில் ஏற்படும் வலியைத் தடுக்கிறது. மேலும் இது உடலுல் மற்ற பிராக்களை போன்ற எந்த வடுவையும் ஏற்படுத்துவது இல்லை. Sex During Periods: மாதவிடாய் நாட்களில் தம்பதிகள் நெருங்காலமா? உங்களுக்கான அந்தரங்க குறிப்புகள் இதோ..!

இது சாதாரணப் பிராக்களில் இருப்பது போன்று கொக்கிகள், கம்பிகள், அழுத்தமான ஸ்ராப்கள் இல்லை. அதனால் இது மார்பகங்களை காயப்படுத்தல் இருக்கும். மேலும் இதை அனைத்து வயதுடையவரும், அவர்களின் மார்பகங்களுக்கேற்ப அணியலாம். தற்போது இளம் பெண்கள் ஸ்போர்ட்ஸ் பிராவையே அதிகம் விரும்புகின்றனர். இருப்பினும் இந்த பிராக்களை ஒரு நாள் முழுவதும் அணிய வேண்டாம் தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.