Hairstyle Tips For Men: ஆண்களுக்காக டிப்ஸ்... முகத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுப்பது எப்படி?.!

ஆண்கள் முகத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைலை தேர்வுசெய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Hairstyle Tips For Men (Photo Credit: @matador_men X)

டிசம்பர் 22, சென்னை (Chennai): ஆண்கள் பெரும்பாலும் ஹேர்ஸ்டைல்க்கு அதிகமாக முக்கியத்துவம் காட்டுவார்கள். பல ஆண்கள் பலவிதமான ஹேர்ஸ்டைல் செய்வார்கள். ஆனால் அவர்கள் முகத்திற்கு செட் ஆகாமல் இருக்கும். அதனை பார்த்துத் திரும்ப வேறு ஒரு ஹேர்ஸ்டைல் மாற்றுவார்கள். அதுவும் முகத்திற்கு அழகாக இருக்காது. அதனால் இந்த பதிவில் அவர்களுக்கான ஹேர்ஸ்டைலை எப்படி தேர்வு செய்வது என்று பார்ப்போம்.

உங்கள் முக வடிவமைப்பு, முடியின் நீளம் மற்றும் அகலம், அத்துடன் தாடியின் அமைப்பு ஆகியவை வைத்து தான் நீங்கள் உங்கள் ஹேர்ஸ்டைலை முடிவு செய்ய வேண்டும். முகம் முக்கோண வடிவிலிருந்தால் அதற்கு ஏற்ற ஹேர்ஸ்டைலை தேர்வுசெய்து கொள்ள வேண்டும். சதுர வடிவில் முகம் இருந்தால் அந்த முடியுடன் சேர்த்து தாடியும் பராமரித்து வைத்து கொண்டால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். Thoothukudi flood: தூத்துக்குடியில் வெள்ளத்தால் 70 பேர் பலி.. வெள்ளத்தில் மிதக்கும் சடலங்கள்...!

முன்நெற்றியில் முடி குறைவாக இருந்து மற்றும் சுழி இருந்தால், அந்த ஹேர்கட் செய்யும் போது முன்பகுதியில் உள்ள முடியைக் குறைவாக வெட்டுவது தான் சரியாக இருக்கும். முகம் வட்ட வடிவில் இருந்து, தாடை பெரிதாக இருந்தால் இவர்கள் அதிகளவில் முடி வெட்டினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் மற்றும் ஷாட் ஹேர்கட் செய்வதைத் தவிர்க்கவும். நீள்வட்ட முகமாக இருந்தால் அவர்கள் முகத்தின் நெற்றி பகுதியில் முடி விழுவது போல் வெட்டிக் கொள்ளலாம். சிறிய முகமாக இருந்தால் ஹேர்கட் செய்வது ஸ்பைக் ஹேர்ஸ்டைல் போல் வெட்டி கொண்டு முகம் முழுவதுமாக தெரிவது போல் பின்னோக்கி சீவிக் கொண்டால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

ஹேர்கட் செய்வதற்கு, முதலில் தலையில் இரட்டைச் சுழி இருந்தால் அவர்களுக்கு நடுத்தரமாக முடி இருப்பது போல் முடி வெட்ட வேண்டும். அதற்குப் பதிலாக ஷார்ட்டாக கட் செய்யலாம். இல்லை என்றால் சுழி இருக்கும் இடத்தில் மட்டும் முடி இல்லாமல் மற்ற இடங்களில் முடி தூக்கிக்கொண்டு இருக்கும். ஹேர்ஸ்டைல் என்பது குறிப்பிட்ட நாட்கள் மட்டும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு பிறகு,ஹேர்டைல் மாற்ற வேண்டும். பொதுவாக 20 முதல் 37 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக ஹேர்கட் செய்ய வேண்டும்.