FLOOD DEAD (Photo Credit: @vkmwanders X & pixabay)

டிசம்பர் 22, தூத்துக்குடி (Thoothukudi): வட கிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில வாரங்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்தது. மேலும் கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பின. தற்போது வரை பல நூறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்கெல்லாம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழ்நாடு அரசுடன் முப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். Prague University shooting in Czech Republic: செக் குடியரசு நாட்டில் பயங்கரம்... பல்கலைக்கழக துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலி..!

வெள்ளத்தால் 70 பேர் பலி: இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முத்தம்மாள் காலணி பகுதியில் மட்டும் 30க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நெல்லை அரசு மருத்துவமனையில் 41 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.