AUS Vs IND 1st Test, Day 2 (Photo Credit: @BCCI X)

நவம்பர் 23, பெர்த் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 16-வது பார்டர் கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy 2024) தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு (AUS Vs IND 1st Test, Day 2) சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், நேற்று (நவம்பர் 22) முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியது. இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. IND Vs AUS 1st Test: பெர்த் டெஸ்ட் முதல் நாளில் இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியா அணி தடுமாற்றம்..!

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) 41 ரன்களும், ரிஷப் பண்ட் ((Rishabh Pant) 37 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில், ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood) 4, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 27 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 67 ரன்கள் அடித்தது. அலெக்ஸ் ஹரி 19, மிட்செல் ஸ்டார்க் 6 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 51.2 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி விக்கெட்டுக்கு 110 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தனர். மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) மட்டும் 112 பந்துகள் தாக்குப்பிடித்து 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திய அணி தரப்பில் பும்ரா (Jasprit Bumrah) 5, ஹர்ஷித் ராணா 3, சிராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்திய அணி 46 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடவுள்ளது.

ஆஸ்திரேலியா 104 ரன்னுக்கு ஆல் அவுட்: