Swami Vivekananda Quotes: 125 வது பிறந்தநாள்; சுவாமி விவேகாந்தன்தாரின் 20 பொன்மொழிகள் இதோ.!
மேற்குவங்கம் மாநிலத்தில் பிறந்து, மேற்குலக நாடுகளில் மிகப்பெரிய அளவில் போற்றப்பட்ட ஆசான் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில், அவரின் பொன்மொழிகளை நினைவுகூர்வோம்.
ஜனவரி 11, சென்னை (Chennai): இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதியாக அறியப்பட்ட ராமகிருஷ்ணரின் தலைமை சீடர் சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda). மேற்கத்திய நாடுகளில் யோகா, இந்தியாவின் கலாச்சாரமுறைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்கை கொண்ட சுவாமி விவேகானந்தர், மதங்களுக்கும் அப்பாற்பட்ட மிகப்பெரிய தலைவராகவும் கவனிக்கப்படுகிறார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கல்கத்தாவில் ஜனவரி 12, 1863 ஆம் ஆண்டு நரேந்திரநாத் தத்தா என்ற இயற்பெயருடன் பிறந்த விவேகானந்தர், சிறுவயதிலிருந்து இந்து சமயம் மற்றும் ஆன்மீகம் தொடர்பாக அதிக ஈடுபாடுகளை கொண்டவர். தனது 18 வயதில் ராமகிருஷ்ணரை சந்தித்து இறைப்பணியை தொடங்கியவர், பின்னாளில் அவரின் தலைமை சீடராகவும் இருந்தார்.. Thiruvathirai Kali: திருவாதிரை ஸ்பெஷல் களி செய்வது எப்படி? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
உலகளவில் அறியப்பட்ட விவேகானந்தர்:
ராமகிருஷ்ணனின் மரணத்தை தொடர்ந்து, இந்திய துணை கண்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே" என உரையாற்ற தொடங்கினார். அதனைத்தொடர்ந்து, யோகா, விவேகானந்தரின் சிந்தனைகள் அங்கு அதிகம் பிரபலமடைந்தன. மேலும், அவர் தெய்வீகத் தன்மை உடையவராகவும் கவனிக்கப்பட்டார். அமெரிக்காவுக்கு பின் இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் என பல இடங்களில் தனது சொற்பொழிவையும் நிகழ்த்தி மிகப்பெரிய அடையாளம் பெற்றிருந்தார். காலனித்துவ இந்தியாவில் தேசியவாத கருத்துகளும் அவரிடம் அதிகம் இருந்தன. 39 வயதிலேயே அவர் இயற்கையை எழுதியிருந்தாலும், ஒட்டுமொத்த உலகத்திற்கும், எதிர்காலத்திற்கு தேவையான பல விஷயங்களை தனது வார்த்தைகளாக பதித்துவிட்டு சென்றிருக்கிறார். Pongal Kolam 2025: பொங்கலுக்கு இப்படி கோலங்களை போடுங்க.. ஏரியாவே வாய்ப்பிளக்கும்.!
ஜனவரி 12ஆம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், விவேகானந்தரின் பொன்மொழிகள் (Swami Vivekananda Quotes) குறித்து சில தகவல்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) உங்களுக்காக பகிருகிறது.
1. ஒரு போதும் இல்லை என்று சொல்லாதே, நீ எல்லையற்றவர், எல்லா சக்தியும் உனக்குள்ளேயே இருக்கிறது. உன்னால் எதையும் செய்ய முடியும்..
2. இதயத்திற்கும் மூளைக்கும் இடையே மோதல் ஏற்பட்டால், இதயத்தை பின்பற்றி செயல்படுங்கள்.
3. உங்களின் ஆன்மாவை தவிர வேறு சிறந்த ஆசிரியர் யாருமில்லை. யாராலும் உங்களை ஆன்மீகவாதியாக ஆக்கவும், கற்பிக்கவும் இயலாது. நீங்களே உங்களின் பாதையில் வளருவீர்கள்..
4. இயற்கையின் இருப்பு ஆன்மாவின் கல்வி மட்டுமே.
5. வலிமையின் உயர்ந்த வெளிப்பாடு நமது அமைதி, நம்மை சொந்த காலில் வைப்பது மட்டுமே..
6. நீங்கள் வேலையுடன் இருக்கும்போது அனைத்தும் எளிதாகும், சோம்பேறியாக இருந்தால் எதுவும் எளிதானதாக இருக்காது..
7. உங்களின் இலக்கை திறமைகளின் அளவுக்கு குறைக்க வேண்டாம், உங்களின் திறன்களை இலக்குகளின் உயர்த்திற்கு மாற்றங்கள்!
8. வாழ்க்கைப் பயணத்தில் பிரச்சனைகளை கண்டு தயங்காமல் முடிவெடுங்கள்., வெற்றி பெற்றால் வழி நடத்துங்கள்! தோற்றால் வழி காட்டுங்கள்!
9. நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ, அதற்கு முழு பொறுப்பு நாம் தான்.. நாம் என்னவாக இருக்க விரும்புகிறோமோ, நம்மை நாமே உருவாக்கிக் கொள்ளும் சக்தி நமக்குள் இருக்கிறது!
10. நாளுக்கு ஒரு முறையாவது உங்களுடன் நீங்களே பேசுங்கள்!
11. உங்கள் விதியை உருவாக்குபவர் நீங்களே!
12. உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால், உண்மையை எக்காரணம் கொண்டும் தியாகம் செய்யக்கூடாது!
13. நாம் எண்ணத்தையும் நம்மையும் உருவாக்கியது நாம் தான் என்பதால், என்ன நினைக்கிறீர்கள் என்ற விஷயத்தில் கவனத்துடன் இருங்கள். வார்த்தை இரண்டாம் பட்சம் எனினும், எண்ணங்கள் வாழுகின்றன!
14. யோசனையை வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால், அதைப் பற்றி சிந்தியுங்கள். அதுதான் வெற்றிக்கு வழி! உங்கள் உடல் முழுவதும் அந்த யோசனை வெற்றியை நோக்கி யோசிக்கட்டும்..
15. புத்தகங்கள் எப்போதும் மதங்களை உருவாக்குவதில்லை! மதங்கள் புத்தகங்களை உருவாக்குகிறது!
16. எல்லா சக்தியும் உனக்குள் இருக்கிறது, அதை நம்பு..
17. தூய்மை, விடாமுயற்சி, பொறுமை ஆகியவை அனைத்து தடங்களையும் தாண்டும் சக்தியை கொடுக்கும்..
18. பால்வழி அண்டத்தின் எல்லையற்ற நூலகம், உங்களது மனது!
19. எல்லோரைப் போலும் ஒரே திசையில் ஓடாதீர்கள்.. உங்களுக்கான இலக்கை நிர்ணயித்து அதற்கு ஏற்ப பயணத்தை தொடருங்கள்!
20. ஒரு முயற்சியை கூட செய்யாதவனை விட, போராடுபவன் எவ்வளவோ மேலானவன்!
விவேகானந்தரின் வழியில் பயணிக்க, அவரின் வார்த்தையை பின்பற்றி உங்களின் வாழ்க்கையை முன்னேற்றுங்கள்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)