ஜனவரி 09, சென்னை (Kitchen Tips): தமிழ் நாள்காட்டியின்படி மார்கழி மாதத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரம், அதன் தொடக்கத்தையும் - முடிவையும் அம்மாதத்திலேயே கொண்டு இருக்கும். திருவாதிரை நாள் நடராஜருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திருவாதிரை அன்று விரதம் இருந்து இறைவனுக்கு களி படைத்து அனைவரும் களி சாப்பிடுகின்றனர். திருவாதிரை நாளன்று களி சாப்பிட்டால் அதன்பலன் அளவிடற்கரியது. அப்படிப்பட்ட திருவாதிரை ஸ்பெஷல் களி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 3 கப்
ஏலக்காய் – 4 எண்ணம்
தண்ணீர் – 2& 1/2 கப்
நெய் – 1/4 கப்
தேங்காய் - 1
முந்திரி – 10 எண்ணம் Pongal Special Recipes: வெண்பொங்கலுக்கு ஏற்ற பரங்கிக்காய் கூட்டு செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
செய்முறை:
பச்சரிசி 1 கப், பாசிப்பருப்பு கால் கப்பு, ஒன்றரை முதல் 2 கப் வெல்லம், நெய், தேங்காய், முந்திரி, ஏலக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் மனம் வரும் வரை லேசாக வறுத்து, கொர கொரப்பாக அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு, வெல்லத்தை பாகு காய்ச்சி எடுத்து, அதில் பொட்டித்து வைத்த அரிசி, பருப்பை போட்டு நன்கு கிளற வேண்டும். கெட்டி படாமல் நெய் விட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு தேங்காய், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை கலந்து, கெட்டியானதும் இறக்கி, இறைவனுக்கு படைத்து வழிபடலாம்.