Aadi Amavasya 2024: இன்று ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு.!
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முக்கிய நாளாக கருதப்படும் ஆடி அமாவாசை நாளில், காலை முதலாகவே பக்தர்கள் திரளாக வந்து தங்களின் கடமையாற்றி வருகின்றனர்.
ஆகஸ்ட் 03, தூத்துக்குடி (Thoothukudi News): ஆடி மாதம் என்றாலே தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள பகுதிகளில் பிராந்திய அளவிலான கோவில்களில் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என்பது களைக்கட்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் ஆடி மாதமும் - அம்மன் கோவில் திருவிழாக்களும் பிரிக்க இயலாதவை. தமிழ் மாதங்களில் மிகமுக்கிய பண்டிகை காலமாக கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை ஆடி மாதத்தின் முக்கிய நாட்களில் ஒன்றாக கவனிக்கப்படுகிறது.
முன்னோர்களின் ஆசி கிடைக்கும்:
இந்நாளில் முன்னோர்களை வழிபடுவது முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. இதனால் ஆடி அமாவாசை (Aadi Am) நாளில் ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு செல்லும் பக்தர்கள், அங்கு நீராடி முன்னோர்களை வணங்குவார்கள். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்கி சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் போன்றவற்றை செய்வது பாவங்கள் அகலும், முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. Potato Mixture Recipe: உருளைக்கிழங்கை பயன்படுத்தி சத்தான மிச்சர் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
இன்று ஆடி அம்மாவாசை; நல்லநேரம்:
ஆடி மாதத்தில் தோன்றும் அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபடுவது, அவர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் என்பது 41 தலைமுறைகளுக்கு சென்றடையும் என்பது இயதீகம். இதனால் மோட்சமில்லாத முன்னோர்களுக்கும் மோட்சம் கிடைத்து நன்மை உண்டாகும். இந்நாளில் காகத்திற்கு சாதம் வைத்து, அவை உணவு சாப்பிட்ட பின்னர் நாமும் சாப்பிடலாம். ஆடி அமாவாசைக்கான நல்ல நேரமாக இன்று காலை 6 மணிமுதல் 11:55 வரை கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். பகல் 12 மணிமுதல் 01:30 வரை எமகண்டம் என்பதால், அதற்கு முன்பு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. Aadi Amavasai 2024: ஆடி அமாவாசை 2024.. படையில் போடுவதற்கு ஏற்ற நல்ல நேரம்.. காகத்திற்கு உணவு கொடுப்பதன் பலன்..!
ஆறுகளில் குவிந்து தர்ப்பணம் கொடுக்கும் பக்தர்கள்:
அந்த வகையில், ஆடி அமாவாசையான இன்று காலை முதலாகவே பல்வேறு ஆறுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர். காவேரி ஆற்றில் நீர் அதிகளவு செல்வதால், பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க பாதுகாப்பு மையங்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை தவிர்த்து வேறு பகுதிகளில் தர்ப்பணம் கொடுக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் நபர்கள், தாமிரபரணி ஆற்றில் காலை முதலாகவே திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த காட்சிகள் இத்துடன் உங்களின் பார்வைக்காக இணைக்கபட்டுள்ளது.