ஆகஸ்ட் 03, சென்னை (Kitchen Tips): பொதுவாக குழந்தைகளுக்கு பிடித்தமான மிச்சரை கடையில் வாங்கி கொடுப்போம். அந்தவகையில், வீட்டிலேயே எளிய முறையில் உருளைக் கிழங்கை பயன்படுத்தி சத்தான மிச்சர் (Potato Mixture)எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு - 1
பூண்டு - 4 பல்
நிலக்கடலை - ஒரு கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு. Karuveppilai Thokku Recipe: ருசியான 'கறிவேப்பிலை தொக்கு' செய்வது எப்படி? விபரம் உள்ளே..!
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி அதனை வட்டமாக நறுக்கி கொள்ளவும். பின்பு அதனை நீல் வாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
அதனை தண்ணீரில் நன்கு கழுவி, பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் நறுக்கி வைத்த உருளைக் கிழங்கை போட்டு பொரிக்கவும், அதனுடன் பூண்டை நசுக்கி அதில் போடவும். இதனை எடுத்து தனியாக வைக்கவும்.
பின்னர், நிலக்கடலையை வறுத்து எடுத்துக் கொள்ளவும், அடுத்து, கறிவேப்பிலையை வறுத்துக் கொள்ளவும்.
இதன்பின், வறுத்த உருளைக் கிழங்கு, நிலக்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு மிக்சர் ரெடி.