Global Energy Independence Day 2024: உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம்.. இதன் முக்கியத்துவம் என்னென்ன தெரியுமா?!
உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூலை 10 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
ஜூலை 10, புதுடெல்லி (New Delhi): சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எரிசக்தி பொருட்களை பயன்படுத்தாமல் அதற்கு மாற்றமான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10 ஆம் தேதி உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம் (Global Energy Independence Day) அனுசரிக்கப்படுகிறது. மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் பற்றிய விழிப்புணர்வினை இன்னாளில் ஏற்படுத்துகின்றனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள்: இயற்கை வளங்களான, சூரியன், காற்று, தாவரங்கள் மற்றும் நீரை, நிலைத்திருக்கும் மற்றும் சுத்தமான எரிசக்திக்காக பயன்படுத்துவது தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable energy) ஆகும். சூரிய சக்தி வெப்பமாக்க மற்றும் கட்டிடங்களுக்கு ஒளி தர, வெந்நீர், குளிர்வித்தல் மற்றும் பல்வேறு வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படுத்துகிறது. Is Cartoon Network Closing Down?: கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா? வைரலாகும் ஹேஷ்டேக்..!
காற்று சக்தி காற்றில் இருக்கும் சக்தியை மின்சார உற்பத்திக்காகவும், பேட்டரி சார்ஜ் செய்வதற்காகவும், நீரேற்றுவதற்காகவும் மற்றும் தானியங்களை அரைப்பதற்காகவும் பயன்படுத்துகிறது. நீர் சக்தி பாயும் நீரில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. புவி அனல் சக்தி பூமியின் வெப்பத்தை எரிசக்திக்கான ஆதாரமாக பயன்படுத்துகிறது.