Global Handwashing Day 2024: "வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணிக்கிட்டே இருங்க.." இன்று உலக கை கழுவுதல் தினம்.!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 அன்று உலகளாவிய கை கழுவுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அக்டோபர் 15, சென்னை (Special Day): கொரோனா தந்த பாடங்களில் ஒன்றாக கை கழுவுதலும் சேர்ந்திருக்கிறது. அக்டோபர் 15 அன்று சர்வதேசளவில் அனுசரிக்கப்படும், கை கழுவுதல் தினம் (Global Handwashing Day) அதனை நாம் மறவாதிருக்க வலியுறுத்துகிறது. தடுப்பூசி கண்டறியப்படும் வரை, கொரோனாவை அண்டவிடாது தவிர்ப்பதற்கு சோப் கொண்டு கை கழுவுவது பிரத்யேக உபாயமாக பரிந்துரைக்கப்பட்டது. வளர்ந்த மற்றும் ஏழ்மை நாடுகளில் அதிகளவிலான உயிர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் பலியாவதற்கு, முறையாக கை கழுவும் பழக்கம் இல்லாததே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே இன்று உலக கைகழுவுதல் தினம் அனுசரிக்கப்படுகிறது. World Standards Day 2024: உலக தரநிலைகள் தினம்.. இந்தியாவின் தர நிர்ணய அமைப்பு பற்றி தெரியுமா?!
கை கழுவும் முறைகள்:
- தண்ணீரில் கைகளை கழுவினாலே சுத்தம் செய்தது என்று நினைக்க வேண்டாம். அதற் காக வாஷ்பண்ணிக்கிட்டே வாஷ் பண்ணிக்கிட்டே இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.
- கைகளை வெறும் நீரில் கழுவாமல் சோப்பு அல்லது சோப்பு நீர் போட்டு தேய்த்து கழுவுவதுதான் முறையான கைகழுவுதல் ஆகும்.
- சோப்பு போட்டு கைகளை உடனே கழுவாமல் 30 விநாடிகளாவது கைவிரல்கள் நக இடுக்குகள் விரல் இடுக்குகளைக் கழுவுவதன் மூலம் 80 சதவீதமான தொற்று நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
- சாப்பிடுவதற்கு முன்பும், விளையாடிய பிறகும், சாப்பிட்ட பிறகும், கழிப்பறைகளைப் பயன் படுத்தும் ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
- வளர்ப்பு பிராணிகள் இருக்கும் வீடுகளில் கைச்சுத்தத்துக்கு கூடுதல் பராமரிப்பு தேவை.