Andal Jayanthi: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்; கேட்ட வரம் தரும் ஆண்டாள் அருள் பெறுக, வாழ்வில் மகிழ்ச்சி பெறுக.!

இந்நாளில் ஆண்டாள் - ரங்கநாதரை வணங்குவது முக்கியமானது.

Andal Jayanthi 2024 (Photo Credit: Maha_Periyavaa X)

ஜூலை 05, ஸ்ரீவில்லிபுத்தூர் (Srivilliputhur): பண்டிகைகளுக்கு பஞ்சமில்லாத, அம்மன் கோவில் திருவிழாக்களால் விழாகோலமிடும் மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. ஆடி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை என சிறப்பு பண்டிகைகள் களைகட்டும். 27 நட்சத்திரங்களில் பூரம் நட்சத்திரத்தில் வைணவ சம்பிரதாயப்படி 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பிறந்த தினமாகவும் ஆடி பூரம் கவனிக்கப்படுகிறது. இந்த திருநாளே வைணவ சமயத்தாரால் ஆண்டாள் ஜெயந்தி எனவும் வருணித்து சிறப்பிக்கப்படுகிறது. இந்நாள் ஆண்டாள் பூவுலகில் அவதாரம் எடுத்த நாளாகவும் நம்பப்படுகிறது.

புவியில் அவதரித்த நாள்:

ஆண்டாள் ஜெயந்தி (Andal Jayanthi ) என அழைக்கப்படும் ஆடிப்பூரம், லட்சுமியின் தேவியின் அவதாரமான ஆண்டாளுக்காக அர்பணிக்கப்பட்டது. ஆடிப்பூரம் 2024 பண்டிகை ஆகஸ்ட் 07ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் ஆண்டாள் மக்களை ஆசிர்வதிக்க வருவார் என்பது ஐதீகம். வலிமையான மற்றும் துடிப்பான ஆற்றல் கொண்ட பார்வதி தேவி, தனது பக்தர்களை ஆசிர்வதிக்க புவியில் அவதரித்து பெண்மையை அடைந்த நாளாகவும் இந்நாள் சிறப்பிக்கப்படுகிறது.

பெரியாழ்வாரின் கண்டிப்பு:

இதிகாசங்களின்படி, பெரியாழ்வார் என்ற ஆழ்வார் துறவி, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்துள்ளார். குழந்தை இல்லாத துன்பத்தை தீர்க்க விஷ்ணுவிடம் அவர் வேண்டிய நிலையில், கோவில் வழியே நடந்து சென்றபோது தோட்டத்தில் கண்டெடுத்த குழந்தையை கோதை என பெயரிட்டு வைணவ மரபில் வளர்ந்த்தார் என்ற சொல்லும் உண்டு. ஒருகட்டத்தில் கோதையின் ரங்கநாதரான (விஷ்ணு) மீது பக்தி அளவுகடந்து செல்ல, அர்ச்சனை செய்யும் முன்னே மாலையும் அணிய தொடங்கி, ஒருநாள் பெரியாழ்வாரின் கண்ணிலும் சிக்கி கண்டிப்பை பெற்றார். Soft Drinks: குளிர்பானம் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனை; அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.! 

ஆண்டாள் - ரங்கநாதர் திருமணம்:

பின் ஒருநாள் இரவில் பெரியாழ்வாரின் உறக்கத்தில் விஷ்ணு தோன்றி ஆண்டாள் அணிவித்தபின் மாலையை அணிவிக்க கூறியுள்ளார். ஆண்டாளும் தனது தந்தையிடம் ரங்கநாதரைத் தவிர வேறொரு நபரை திருமணம் செய்யமாட்டேன் என கூறிவிட, தனது பக்தையை விஷ்ணு கோவில் கருவறையில் கரம்பிடித்தார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பிக்கப்படும் ஆடி பூரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 10 நாட்களாக கொண்டாடப்படும் திருவிழாவில், 10 ம் நாள் ஆண்டாள் - ரங்கநாதர் திருமணம் நடைபெறும்.

குழந்தை பாக்கியம் அருளும்:

ஆடி பூரம் அன்று திருமணம் ஆகாத, வரன் தேடும் நபர்கள் 10 வது நாள் பூஜையில் கலந்துகொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடல்களை மனதார பாடி பிரார்த்தனை செய்யலாம். அதேபோல, பல கோவில்களிலும் அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்டு கண்ணாடி வளையல்கள் வழங்கப்படும். இதனை அணிந்துகொண்டால் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளிற்கு தீய சக்திகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும்.

நல்லநேரம்:

வீட்டில் இருந்தபடி ஆண்டாளின் திருநாமத்தைபோற்றி, பக்தர்கள் பூஜை செய்ய நல்ல நேரமாக காலை 09:15 முதல் 10:30 மணிவரையிலும், மாலை 04:45 முதல் 07:29 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீட்டில் பூஜை செய்து வழிபடலாம்.