International Day for the Eradication of Poverty 2024: "வறுமை என்னும் ஆழ்கடல்" இன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்.!

வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.

International Day for the Eradication of Poverty (Photo Credit: LatestLY)

அக்டோபர் 17, சென்னை (Special Day): வறுமையில் வாடும் மக்களின் அன்றாடப் போராட்டங்களையும் குறிக்க ஆண்டுதோறும் அக்டோபர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் (International Day for the Eradication of Poverty) அனுசரிக்கப்படுகிறது.

வரலாறு: வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் மக்களை பாதுகாக்கும் வகையில், 1948ல் கையெழுத்திடப்பட்ட தீர்மானத்தின் படி, 22 டிசம்பர் 1992 அன்று ஐக்கிய நாடுகளின் (UN) பொதுச் சபை அக்டோபர் 17 ஆம் தேதியை வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக அறிவித்தது. 2015ஆம் ஆண்டு உலகில் உள்ள வறுமையில் வாடும் மக்களில் பாதி பேர் இந்தியா, நைஜீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, வங்கதேசத்தில் வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

உலக அளவில் அதிக அளவிலான வறுமை நிலையில் வாழும் மக்கள் ஆப்ரிக்க நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. தினமும் 1.90 டாலருக்கு குறைவான வருவாய் உள்ள மக்கள் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மக்களாக கணக்கிடப்படுகின்றனர். 2030 ஆம் ஆண்டுக்குள் ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தொலைநோக்கு வளர்ச்சி இலக்கு. World Food Day 2024: "பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" உலக உணவு தினம்..!

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பம் தருவது அந்த வறுமையேயன்றி யாதுமில்லை என்கிறார் வள்ளூவர். வறுமையில் உள்ளவர்களுக்கு ஆதரவே, நாம் வறுமையில் இருப்பதால் அதற்கு உயர்வான வாழ்க்கைக்கு ஆசைப்படகூடாது என்ற மனநிலையை மருந்தாகிறது.

வறுமை ஒழிப்பு கவிதை:

ஐயா கேளுங்கள்

அக்டோபர் 17

வறுமை ஒழிப்பு

தினமாம்.?

இந்தியாவில்

ஒரு நாளின்

உழைப்பூதியம்

ரூபாய் 100 க்கும் கீழ்

பெறுவோர்

80 கோடிபேராம்.

புள்ளி விபரம்

சொல்கிறது.

இது மொத்த

தொகையில் 75 %

அப்படின்னா !!

உழைத்தவன் யார்?

உயர்ந்தவன் யார்?

வறுமையை

வளர்த்தவன் யார்?

ஒழிப்பவன் யார் ?

அக்டோபர் 17 மட்டும்

வந்து போகும்

ஆனால்

வறுமை ????

- கவிதைக்கு நன்றி, நெல்லை தில்லை.