India’s squad for Tour of Australia announced (Photo Credit : @BCCI X)

அக்டோபர்  04, புதுடெல்லி (Sports News Tamil): ஆசியக்கோப்பை 2025ஐ கைப்பற்றிய இந்திய தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team), தற்போது வங்கதேச தேசிய கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில், இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் இன்னிங்ஸ் வெற்றி அடைந்துள்ளது. அடுத்தப்போட்டி அக்.10ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. விரைவில், ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி - இந்திய தேசிய கிரிக்கெட் அணி (Australia National Cricket Team Vs India National Cricket Team) மோதுகின்றன. RSAW Vs ENGW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; தென்னாப்பிரிக்கா மகளிர் படுதோல்வி.. இங்கிலாந்து மகளிர் அணி இமாலய வெற்றி..!

இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் 2025 (India’s Tour of Australia 2025):

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் மோதுகிறது. முதல் ஒருநாள் போட்டி அக்.19ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, அக்.23ல் இரண்டாவது போட்டியும், அக்.25ல் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது. அக்.29 முதல் நவம்பர் மாதம் 08ம் தேதி வரையில் 5 டி20 போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்த போட்டியில் வெற்றியை உறுதி செய்ய இரண்டு அணிகளும் போராடும் என்பதால், ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி வீரர்கள் (IND Vs AUS Cricket Series 2025 Squad):

ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் கிருஷ்ணா, ஜவிஸ்ஷா, பிரசித் கிருஷ்ணா

இந்திய டி20 அணி கிரிக்கெட் வீரர்கள் (Team India Against Australia Series):

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ஷுப்மான் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் சிங் யாதவ், ஆர்ஷ்தீப் சிங், குல்தீப் சிங் யாதவ் வாஷிங்டன் சுந்தர்

பிசிசிஐ அறிவிப்பு (BCCI Announcement):