IPL Auction 2025 Live

International Youth Day 2024: "நம் முன்னோர்கள் போராட்டத்தின் வாரிசுகள்" இன்று சர்வதேச இளைஞர் தினம்..!

சர்வதேச இளைஞர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.

International Youth Day (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 12, புதுடெல்லி (New Delhi): உலக இளைஞர் தினம் (International Youth Day), ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின்படி 1999 முதல் கொண்டாடப்படுகிறது. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் தினமாக இதனை உலகநாடுகள் கொண்டாடுகின்றன. 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்களை, இளைஞர்கள் (Youth) என ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்துள்ளது. Nagasaki Day 2024: நாகசாகி நினைவு தினம்.. மறக்க முடியாத வலி.. பேரழிவின் வரலாறு என்ன தெரியுமா?!

வரலாறு: சர்வதேச இளைஞர்கள் தினம் முதன் முதலில் 1999ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இத் தினத்தை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான முக்கிய குழுவுடன் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை இணைந்து கொண்டாடிவருகிறது. மேலும் இந்த வருடத்திற்கான இளைஞர்கள் தின கருப்பொருள் “டிஜிட்டல் உலகுக்கு இளைஞர்கள் கொடுத்துள்ள பங்களிப்புகள்” என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் இளைஞர்கள் மத்தியிலான திறன் மேம்பாடு, அமைதி, ஒற்றுமை, உடல்நலன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதத்தில் ஒவ்வொரு அரசுகளும் இளைஞர் நல திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கியமான நோக்கம்.