National Forest Martyrs Day 2024: தேசிய வன தியாகிகள் தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!
தேசிய அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11-ம் தேதி வனத் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 11, புதுடெல்லி (New Delhi): தேசிய அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11-ம் தேதி வனத்தைப் பாதுகாக்க உயிர் நீத்த வனத்துறை ஊழியர்களை நினைவுகூரும் வகையில் வனத் தியாகிகள் தினம் (National Forest Martyrs Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
வரலாறு: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1730-ல் அப்போதைய மன்னராக இருந்த மகாராஜா அபய் சிங்கின் உத்தரவின் பேரில் தொழிலாளர்கள் கெஜார்லி மரங்களை வெட்டத் தொடங்கினர். இந்த மரங்கள் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் புனிதமாகக் கருதப்பட்டன. எனவே இந்த மரங்களை வெட்டும் நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமிர்தா தேவி என்ற பெண் புனிதமான கேஜார்லி மரத்தின் மீது தனது தலையை வைத்துக்கொண்டார். அவர்கள் மரத்தை வெட்ட மாட்டார்கள் என்று நம்பினார். ஆனால் மன்னரின் தொழிலாளர்கள் மரத்தோடு அமிர்தா தேவியின் தலையையும் வெட்டினர். World Suicide Prevention Day 2024: உலக தற்கொலை தடுப்பு தினம்.. தற்கொலை எண்ணத்தில் இருந்து மீள்வது எப்படி?!
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமிர்தாவின் குழந்தைகள் உட்பட 350 க்கும் மேற்பட்டவர்களை மன்னரின் தொழிலாளர்கள் கொன்றனர். இந்த துயர சம்பவம் ராஜா அபய் சிங்கின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அவர் உடனடியாக தனது ஆட்களை பின்வாங்கச் சொன்னார். பிஷ்னோய் மக்களிடம் நேரில் சென்று மன்னிப்பும் கேட்டுள்ளார். தொடர்ந்து அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட செப்டம்பர் 11ம் தேதியை ஒவ்வொரு வருடமும் நினைவுக்கூறும் வகையில் வன தியாகிகள் தினத்தை பிஷ்னோய் மக்கள் அனுசரித்து வந்தனர்.