Thiruvadhirai 2025: நடராஜர், சிவனுக்கு உகந்த திருவாதிரை.. அன்றைய நாளின் அபிஷேகமும் அதன் பலன்களும்.. முழு விபரம் இதோ.!
திருவாதிரை திருவிழா ஜனவரி 13 அன்று சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து வழிபடுவோருக்கு வேண்டுவது கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஜனவரி 08, சிதம்பரம் (Festival News): தமிழ் நாள்காட்டியின்படி மார்கழி மாதத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரம், அதன் தொடக்கத்தையும் - முடிவையும் அம்மாதத்திலேயே கொண்டு இருக்கும். திருவாதிரை நாள் நடராஜருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. திருவாரூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் திருவாதிரை சிறப்புடன் நடைபெறும். அந்நாளில் தியாகராஜ சுவாமி பாத தரிசனம் காண்பிக்கப்படும். தில்லை நடராஜரின் தேர் வீதி உலா வைபவமும் நடைபெறும். திருவாதிரை நோன்பு திருவாதிரை நட்சத்திரத்துடன் நிறைமதி நாளில் உபவாசம் இருந்து மேற்கொள்ளும் விரதம் ஆகும். இந்நாளில் விரதம் இருப்பவர்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் விரதம் மேற்கொண்டு இறைவழிபாடு செய்வார்கள் என்பதால், இதனை திருவாதிரை விரதம் என அழைப்பார்கள். Vaikuntha Ekadashi 2025: வாழ்க்கை செழிப்படைய வைக்கும் வைகுண்ட ஏகாதசி; விரத முறைகள், நல்லநேரம்., தகவல் இதோ.!
திருவாதிரை என்பதன் பொருள்:
திரு + ஆ + திரை = திருவாதிரை
திரு என்றால் சிவம் எனும் நடராசப் பெருமான், ஆ என்றால் பசு எனப்படும் உயிர்கள் அவைகள், ஆணவம், கன்மம், மாயை எனும் அம்மும்மலங்களால் கட்டப்பட்டுள்ளன.
ஆணவமாகிய திரை அறியாமையை விளைவிக்க
ஆண்டவன் தம்முள் இருப்பதை உயிர்கள் அறிய இயலவில்லை!
ஆண்டவனை ஆணவத் திரை மறைக்கின்றது. ஆண்டவனருளினால்,குருவருள் கிட்டுவதால் ஆணவத் திரை அகலும்! ஆதிசிவனும், தானும் ஒன்று என விழிப்புணர்வு ஆகி வருவதால் என்றும் ஆனந்தக் களிப்பு. ஆனந்தக்களிப்ப்பையே திருவாதிரைக் “களி”என ஆன்மீக நூல்கள் பறை சாற்றும். களி என்றால் ஆவாகிய உயிரும் திருவாகிய ஆதி சிவமும் ஒன்று ஆனதால் வரும் “ஆனந்தக்களிப்பு” களி என்பது ஆகாரம் அல்ல. களி என்பது குழுவுக்குறி.
திருவாதிரை பாடல்:
சீவனார் என்றும் சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறி கிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பரே.
ஆனந்த நடனத்தை நவீன பாணியில் பேத்தியன்று
ஆண்டவனருள வரைந்தாள்..
திருவாதிரை 2025 (Thiruvathirai 2025 Date Time):
திருவாதிரை ஆருத்ரா தரிசனம் 2025 ஜனவரி மாதம் 13ம் தேதி அன்று சிறப்பிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் 12ம் தேதி காலை 11:24 மணிமுதல் ஜனவரி 13, காலை 10:38 வரை நீடிக்கிறது. பௌர்ணமி நாளில் திருவாதிரை திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் விரதம் இருப்போர் காலை 06:30 மணிமுதல் 07:30 மணிவரை நல்ல நேரமாகவும் கவனிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் நீங்கள் நடராஜருக்கு விரதம் இருந்து வழிபாடுகளை நடத்தலாம். நடராஜர் ஆலயங்களில் நடக்கும் சிறப்பு பூஜையிலும் கலந்துகொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை திருத்தலத்தில் நடராஜரின் சிலையானது முழுவதும் மரகத கல்லினால் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. இங்கு ஆருத்ரா தரிசனம் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. Raa Pathu 2025: வைகுண்ட ஏகாதசி 2025; ராப்பத்து உற்சவ திருவிழா கொண்டாட்டம்.. தேதி, நேரம் குறித்த முழு விவரம் உள்ளே..!
அபிஷேகமும் அதன் பலன்களும்:
- தேன் அபிஷேகம் செய்தால் சிறந்த பேச்சாற்றல் பெருகும், ஞானம் கிடைக்கும்.
- நெய் அபிஷேகம் செய்தால் செல்வம் கூடும்.
- சந்தனம் அபிஷேகம் செய்தால் தொழில் வெற்றி கிடைக்கும். புகழ் கிடைக்கும்.
- பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்வதால் நோய் நொடி விலகி செல்வம் பெருகும் .
- பால் அபிஷேகம் செய்வதால் வாழ்வில் அமைதி கிடைக்கும்.
- தயிர் அபிஷேகம் செய்தால் நினைத்த செயல் வெற்றி அடையும்.
- பன்னீர் அபிஷேகம் செய்தால் மற்றவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்.
- விபூதி அபிஷேகம் செய்தால் சர்வமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
திருவாதிரை பாடல்:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)