Vinayagar Chathurthi 2024: சங்கடங்களை தீர்க்கும் கற்பகநாத கணபதி; 2024 விநாயகர் சதுர்த்தி நல்ல நேரம், வழிபாடு முறைகள் விவரம் இதோ.!

விநாயகர் சதுர்த்தியானது விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி எப்போது, ​​பூஜை நேரம் என்ன என்கிற முழு தகவலை இங்கே தெரிந்து கொள்வோம்.

Vinayagar Chathurthi (Photo Credit: Team LatestLY)

செப்டம்பர் 06, சென்னை (Festival News): Vinayagar Chathurthi 2024 Images & Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Ganesh Chathurthi:

இந்தியா முழுவதும் கொண்டாடக்கூடிய இந்து பண்டிகை தான் விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chathurthi). ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தமிழர்களின் முறையாகும். அந்த வகையில் இந்த வருடத்தின் விநாயகர் சதுர்த்தி நாளை செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பாமரர் முதல் படித்தவர் வரை அனைவரும் கோலாகலமாக கொண்டாடும் விழா தான் இந்த விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி எப்போது, பூஜை நேரம் என்ன என்கிற முழு தகவலை இங்கே தெரிந்து கொள்வோம். Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. கொழுக்கட்டை செய்வது எப்படி? விவரம் உள்ளே..!

முக்கியத்துவம்: விநாயகர் சதுர்த்தியை (Ganesh Chaturthi) வழிபட்டாலே வினைகள் விலகும். துன்பங்கள் விலகி இன்பம் பிறக்கும். பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என அர்த்தப்படும். ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடையூறுகளை நீக்குபவர்’ என்றும், ‘ஐங்கரன்’ என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்’ அர்த்தப்படும் ‘கணபதி’ என்பது கணங்களுக்கு அதிபதி என்றும் பொருள்படும்.

வழிபாடு முறைகள்: பூஜை செய்வதற்கு ஏதுவாக விநாயகர் சிலைக்கு முன்பு வாழை இலையிட வேண்டும்.வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தை வைக்க வேண்டும். அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். மேலும், அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ ஆகியவை படைக்கப்பட வேண்டும். பின்பு தீபாராதனை காட்டி விநாயகரை வணங்க வேண்டும். Tips to Take Care of Hibiscus Plants: செம்பருத்தி செடியை பராமரிப்பது எப்படி? இப்படி செய்தால் அதிக பூ கிடைக்கும்..!

நல்ல நேரம்: சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி தினம் 2024ம் ஆண்டில் செப்டம்பர் 7ம் தேதி சனிக்கிழமையன்று வருகிறது. இந்த நாளில் வளர்பிறை சதுர்த்தி திதி பிற்பகல் 3.38 வரை இருக்கிறது. எனவே விநாயகருக்குச் செய்யவேண்டிய பிரதான பூஜையை அன்று காலையிலேயே செய்ய வேண்டும். காலை காலை 7.45 முதல் 8.45 வரை நல்ல நேரம் இருப்பத்தால் அந்த நேரத்தில் விநாயகர் வழிபாட்டைத் தொடங்குவது சிறப்பு. சனிக்கிழமை 9 மணி முதல் 10.30 வரை ராகு காலமாக அமையும். எனவே காலை 9 மணிக்கு முன்பாக அல்லது ராகு காலம் முடிந்ததும் காலை 10.30 மணிக்கு மேல் வழிபாட்டைத் தொடங்கலாம்.

மந்திரம்:

  • ஓம் சுமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம:
  • ஓம் கபிலாய நம: ஓம் கஜகர்ணகாய நம:
  • ஓம் லம்போதராய நம: ஓம் விகடாய நம:
  • ஓம் விக்னராஜாய நம: ஓம் விநாயகாய நம:
  • ஓம் தூமகேதுவே நம: ஓம் கணாத்யக்ஷாய நம:
  • ஓம் பாலசந்த்ராய நம: ஓம் கஜானநாய நம:
  • ஓம் வக்ரதுண்டாய நம: ஓம் சூர்ப்பகர்ணாய நம:

புனர் பூஜை: மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம். இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், ஏன் உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement