![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2024/09/kozhukattai--380x214.jpg)
செப்டம்பர் 05, சென்னை (Kitchen Tips): தமிழர்களின் வாழ்வியலில் தொன்றுதொட்டு வணங்கப்பட்டு வரும் விநாயகரை (Vinayagar) நம்மால் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. எந்த காரியத்தை தொடங்கினாலும் மஞ்சள் அல்லது மாட்டுச் சாணத்தில் கூம்பு வடிவில் விநாயகரை (Ganesha) பிடித்துவைத்து வழிபாட்டு அக்காரியத்தை தொடங்குவது நம் வழக்கம். இதனால் அக்காரியம் வெற்றி அடையும் என்பது தமிழர்களின் மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று. விநாயகர் அவதரித்த திதி நாளை விநாயகர் சதுர்த்தியாக (Vinayagar Chathurthi) நாம் கொண்டாடுகிறோம். இத்தகைய விநாயகர் சதூர்த்தி (Vinayagar Chathurthi 2024) என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். இந்த விநாயகர் சதூர்த்திக்கு தேங்காய் பூரண கொழுக்கட்டையை (Kozhukattai) செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 2 கப்
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தேங்காய் பூரணம் செய்ய:
தேங்காய் துருவல் - 2 கப்
வெல்லம் - 2 கப்
ஏலத்தூள் - 1 ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன் Saiva Mutton Sukka Recipe: மட்டன் சுக்கா சாப்பிடுர மாதிரயே இருக்கும்.. சைவ மட்டன் சுக்கா இப்படி செய்ங்க..!
செய்முறை:
தண்ணீர் உடன், உப்பு, நெய் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பின்னர் தேங்காய் பூரணம் செய்ய வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி, பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுக்கவும்.
பின் வெல்லப்பாகை, தேங்காய் துருவல் உடன் சேர்த்து நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை நன்றாக கிளறி, ஏலத்தூள், நெய் விட்டு நன்றாக கலந்து இறக்கவும். பிறகு கொழுக்கட்டை அச்சில் நெய் தடவி, மாவை நிரப்பி உள்ள பூரணம் வைத்து மூடவும். பின் அச்சில் இருந்து மெதுவாக எடுக்கவும். பின் ஆவியில் 12 நிமிடங்கள் வரை வேகவிடவும். கொழுக்கட்டை வெந்த உடன் இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை தயார்.