World Kindness Day 2024: "கருணை பொழியும் ஆறு முகங்களில் ஒரு முகத்தை நீ உறவாக தந்திடு" உலக கருணை தினம்.!
உலக கருணை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13 அன்று கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 12, சென்னை (Special Day): தினம் தினம் கடைப்பிடிக்கபட வேண்டிய கருணையை, அனைவருக்கும் நினைவூட்டுவதற்காகவும் கருணையுடன் இருக்க வலியுறுத்துவதற்காகவும், 1998ல் உலக கருணை இயக்கத்தால் உருவாக்கப்பட்டதே உலக கருணை தினம் (World Kindness Day). யாரோ ஒருவர் முன்பின் தெரியாத யாருக்கோ எதிர்பார்பில்லாமல் உதவி செய்து அன்பை வெளிப்படுத்திக் கொள்வதை தான் கருணை என்கிறோம்.
ஆனால் இந்த காலத்தில் ஒருவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் அவரை நகைச்சுவைக்காக சுலபமாக ட்ரோல் செய்கிறோம். சாலையில் யாருக்காவது விபத்து ஏற்பட்டு கிடந்தால்கூட, உதவி செய்தால் பணம் கொடுத்தாலும் பரவாயில்லை நாம் போலீஸுக்கு பதில்சொல்ல வேண்டுமே என்று உதவாமல் செல்பவர்கள் தான் அதிகம். கருணையையுடன் இருப்பவர்கள் சற்று குறைவு தான். World Pneumonia Day 2024: உலக நிமோனியா தினம்.. ஆண்டுதோறும் நிமோனியாவால் இறக்கும் 6 லட்சம் குழந்தைகள்..!
உலக கருணை தினம்: கருணை, அன்பு என்பது ஒருவருக்கு பணவுதவி அல்லது பெரிதாக அவர்கள் பயனடைவதற்காக செய்யப்படும் உதவி தான் என்பதல்ல. ஒரு சிறிய பாராட்டு கூட அவர்களின் நாளை சிறப்படைய செய்யும்.
உங்களால் ஒருவருக்கு ஒரு வேளை உணவளிக்க முடிந்தால் கூட நீங்கள் கருணையுடையவரே. ஏனெனில் உலகில் பலரும் பட்டினியாக வாழ்கின்றனர். அவர்கள் அனைவரின் பசியையும் தனி நபரால் தீர்க்க முடியாது. ஆனால் ஏதேனும் ஒருவரின் பசியை போக்க முடிந்தாலும் கூட நாம் அதை செய்யலாம்.
நம் முன்னோர்கள் தானத்தில் சிறந்த தானமாக அன்னதானத்தை வைத்துள்ளனர். பிறருக்கு உணவளித்தல் பரிகாரமாகவும், வேண்டியது நடக்கும் என்றால் கூறியதற்கு காரணம், பிறருக்காக இல்லாவிடினும் தனக்காகவாவது பிறருக்கு உணவளிப்பர் என்று.
பிறந்த நாள், திருமண நாட்களில் நண்பர்களை அழைத்து பெரிய அளவில் செலவு செய்து பார்ட்டிகள் வைப்பதற்கு பதிலாக செலவு செய்யும் தொகையில் சிறிய அளவில் எடுத்து அருகிலிருக்கும் குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் இல்லத்திற்கு தரலாம். இதற்கு அதிக தொகை தேவைப்படுவதாக நினைத்தால் தங்களால் எவ்வளவுத் தொகையில் முடிகிறதோ அதை வைத்து குறந்த அளவில், உணவுகளை சாலைகளில் உள்ளவர்களுக்கு தரலாம். அனைவரிடமும் கருணை உள்ளத்தோடு அனுகுங்கள்.