World Thrift Day 2024: “செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம்” உலக சிக்கன நாள்..!
பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி (இன்று) உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 30, சென்னை (Special Day): பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30ம் நாள் “உலக சிக்கன நாள்” கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாகச் செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பாக்கி, எதிர்காலத்தில் பெரும் பயனடைந்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே இந்த “உலக சிக்கன நாள்” (World Thrift Day) வலியுறுத்துகிறது.
சேமிப்பு: சேமிப்பு எதிர்காலத்தில் பயன்பாட்டிற்காக பணத்தை ஒதுக்கி சேமிப்பதாகும். இது ஒரு இலக்கிற்காகவோ அல்லது பிர்கால நிதி தேவைக்காக சேமிப்பதாகும். இது குறுகிய காலத்தில் ஒரு நிதி இலக்கை அடைய உதவும். கார், திருமணத்திற்காக, கடன் அடைக்க நிதியை சேமிப்பதாகும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சேமிக்க வேண்டும் என இலக்கு வைத்து சேமிக்க வேண்டும். தொடர்ச்சியான சேமிப்பு உங்களை இலக்குகளை விரைவாக அடைக்க உதவும். சேமிக்கும் பழக்கம் செலவுகளை கட்டுப்படுத்தும். மேலும் நிதி ஒழுங்குமுறையைக் கற்றுக் கொடுக்கும். Diwali 2024: "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" உங்களின் அன்புக்குரியவர்களுக்கு இந்த வாழ்த்து செய்திகளைப் பகிருங்க.!
கடன் மேலாண்மை: கடன்களை வாங்கி கொண்டே இருக்க கூடாது. கடன்களை அடைக்க வேண்டும் என்பதே முதன்மையானதாக இருக்க வேண்டும். அவசர நிதித்தேவையாக இருந்தாலும் கடன் நிறுவனங்களின் வட்டி விகிதங்களை கருத்தில் கொள்வது அவசியம். கடன்களின், வீடு வாங்க அல்லது பொருட்கள் வாங்க, இஎம்ஐகள், நகை கடன்கள், லொன்கள் போன்றவைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அடைக்க வேண்டும். தற்போது கடன்களில் பலரும் கவனிக்காமல் இருப்பது கிரெடிட் கார்டு கடன்கள் தான். இது கிரெடிட் ஸ்கோரை பாதித்து லோன் வழங்காமல் கிடைக்காமல் போகும்.
தங்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுக்க வேண்டும். நிலம் வாங்குவது வீடு கட்டுவது, வாகனம் சேமிப்பு, எதிர்கால சேமிப்பு, மற்றும் சுய தொழில்கள் என அனைத்தையும் முன்பே திட்டமிட வேண்டும். மேலும் அவ்வப்போது உங்கள் திட்டங்கள் சரியான முறையில் செல்கிறத என்று கண்காணிக்க வேண்டும். இதற்கு நிதி ஆலோசகர் தேவைப்பட்டாலும் அதற்காக செலவு செய்யலாம்.