Biscuit Halwa Recipe: பிஸ்கட் இருந்தா போதும்.. உடனே செய்யலாம் பிஸ்கட் அல்வா..!
பிஸ்கட் அல்வா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஏப்ரல் 11, சென்னை (Kitchen Tips): நினைத்த நேரத்தில் நீங்கள் அல்வா சாப்பிட நினைக்கிறீர்கள் எனில் 10 ரூபாய் பிஸ்கட்டில் அது சாத்தியம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பிஸ்கட் - 1 பாக்கெட்
எண்ணெய் - 1/2 டம்ளர்
சர்க்கரை - 1 கப்
நெய் - 8 ஸ்பூன்
முந்திரி - 10
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை: பிஸ்கட் அல்வா செய்ய அவற்றை முதலில் எண்ணெயில் பொறித்து எடுத்து கொள்ளவும். பிறகு வாணலியில் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்ததும், அதில் பிஸ்கட்டை நன்கு கலந்து கொள்ளவும். Kenya Floods: கென்யா வெள்ளத்தில் சிக்கிய பேருந்து.. மக்கள் பயணிகளை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்..!
அதை நன்கு கலந்து மாவு பதத்திற்கு வந்தவுடன் சர்க்கரை கலந்து கிண்டி விடவும். பின்னர் அடுப்பு சிறிது குறைத்து கொண்டு, தண்ணீர் வற்றிய பின்பு நெய் சேர்த்து நன்கு கிளறி விடவும். சிறிது சிறிது நெய் ஊற்றி நன்கு கிளற வேண்டும். பின்பு நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி விடவும். அவ்வளவு தான், சுவையான பிஸ்கட் அல்வா ரெடி.