ஏப்ரல் 11, கென்யா (World News): கென்யா (Kenya) நாட்டின் லூனா என்ற பகுதியல் 51 பயணிகளுடன் சென்ற பேருந்தானது திடீரென வெள்ளப்பெருக்கில் (Flood) சிக்கிக்கொண்டது. இதனால் பேருந்துக்குள் பாதிக்குமேல் தண்ணீர் புகுந்தது. இந்த 51 பயணிகளும் வெளியேற முடியாமல் தவித்தனர். பயத்தில் பயணிகள் சிலர் பேருந்துவிற்கு மேற்பகுதியில் ஏறி அமர்ந்துக்கொண்டனர். அதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக  கயிற்றினைக் கொண்டு பயணிகளை மீட்டனர். தொடர்ந்து பேருந்தில் இருந்த 51 பயணிகளும் எந்தவொரு பாதிப்புமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். MI vs RCB: பயங்கர எதிர்பார்ப்பில் பங்காளிச் சண்டை.. வெல்லப் போவது யார்.? கோலியா? ரோஹித்தா?.!