Creamy Chicken Kurma Recipe: சூப்பரான க்ரீமி சிக்கன் குருமா செய்வது எப்படி.? நாளைக்கே செய்து பாருங்கள்..!

க்ரீமி சிக்கன் குருமா செய்வது எப்படி என்று இப்பதிவில் நாம் காணலாம்.

Creamy Chicken Kurma (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 12, சென்னை (Kitchen Tips): குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் குருமா (Creamy Chicken Kurma) இது. சோறு, இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி, புரோட்டா என எல்லாவற்றிற்கும் பக்கா காம்பினேஷன் இது.

தேவையான பொருட்கள்:

கோழி - 1 கிலோ

தயிர் - 14 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சிவப்பு மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா - 3 தேக்கரண்டி

எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

பச்சை ஏலக்காய் - 6

வெங்காயம் - 4

முந்திரி - 12

பாதாம் - 8

பிராயிணி இலைகள் - 2

கிராம்பு - 8

இலவங்கப்பட்டை - 4

கருப்பு ஏலக்காய்  - 2

பச்சை மிளகாய் - 4

கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் மற்றும் கரம் மசாலா அனைத்தையும் நன்கு குழைவாக கரைத்து பின்னர் 1 கிலோ சிக்கனை அதில் போட்டு இக்கலவை சிக்கன் முழுவதும் வரும்படி நன்கு பிரட்டி பாத்திரத்தை மூடி போட்டு மூடி 30 நிமிடம் தனியே வைத்துவிடவும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் அல்லது நெய்யை மிதமான சூட்டில் சூடாக்கவும். அதில் பச்சை ஏலக்காய் காய்கள், நறுக்கிய வெங்காயம், முந்திரி மற்றும் பாதாம் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். இந்த கலவையுடன் தயிர் சேர்த்து, அரைத்து வைத்துக் கொள்ளவும். Hero Maverick 440: செம பைக்கை அறிமுகப்படுத்திய ஹீரோ.. இனி டெலிவரி ஆரம்பம்..!

மீண்டும் அதே கடாயில், தேவைப்பட்டால் மேலும் எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். அதனுடன் பிரியாணி இலைகள், கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் கருப்பு ஏலக்காய் சேர்க்கவும். ஒரு நிமிடம் வாசனை வரும் வரை வதக்கவும். அதனுடன் ஊற வைத்த சிக்கனை போட்டு அடுப்பை மிதமாக எரியவிட்டு இந்த சிக்கனில் இருக்கும் நீர் வற்றும் வரை சமைக்கவும். தயார் செய்த வெங்காய விழுதை ஊற்றி சிக்கனுடன் நன்கு கலக்கவும்.

பின்னர் கீறிய பச்சை மிளகாய், தண்ணீர், உப்பு சேர்க்கவும். அடுப்பை மிதமாக எரிய விட்டு 5 நிமிடங்கள் வரை ஆன பின், மிளகாய், மல்லி, கரம் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கலந்துவிடவும். அடுப்பை குறைவாக எரியவிட்டு 20 முதல் 25 நிமிடங்கள் சமைக்கவும். அதன் பின்னர் மூடியைத் திறக்க மேலே சிவப்பாய் எண்ணெய், பிரிந்து செழிப்பாக சிக்கன் வெந்திருக்கும். அதை நன்கு ஒரு கிளறு கிளறி நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லித் தழைகளைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். அவ்வளவு தான் கமகமக்க அற்புதமான ருசியில் க்ரீமி சிக்கன் குருமா ரெடி.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் குருமா இது. சோறு, இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி, புரோட்டா என எல்லாவற்றிற்கும் பக்கா காம்பினேஷன் இது. உங்கள் வீட்டு விருந்தில் கட்டாயம் இடம் பெற வேண்டிய ரெசிபி.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif