Fertility Management: நெல்பயிரில் இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை.. விபரம் உள்ளே..!
இலை வண்ண அட்டை என்பது மலிவான மற்றும் எளிதாக பயன்படுத்தக்கூடிய கருவியாகும், இதனைக் கொண்டு விவசாயி தானாகவே இலையில் தழைச்சத்து நிலையை மதிப்பிட்டலாம்.
செப்டம்பர் 24, புதுடெல்லி (Agriculture Tips): இலை வண்ண அட்டை (Leaf colour chart-LCC) பயிரின் தேவையறிந்து உரமிட பயன்படுத்தப்படுகிறது. இதில் 1 முதல் 5 பசுமை நிற பட்டைகள் உள்ளன. நெல்லில் தழைச்சத்து மேலாண்மை இலை வண்ண அட்டையின் மூலம் முடிவு செய்யப்பட்டு அளவிடப்பட்ட எண்ணை வைத்து முடிவுசெய்யப்படுகிறது. Sugarcane Diseases: கரும்பில் ஏற்படும் செவ்வழுகல் நோய்.. தவிர்ப்பதற்கான வழிகள் என்னென்ன?!
இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை:
- இலை வண்ண அட்டையை பயன்படுத்தி இலை உரம், மற்றும் மண்புழு உரம் இடுவதால் நெல்லின் வளர்ச்சியையும், மகசூலையும் அதிகரிக்கலாம். மேலும் சரியான நேரத்திற்கு உரங்களையும் இடலாம்.
- இந்த அட்டையைப் பயன்படுத்தி, நடவு செய்து 14 நாட்கள் அல்லது நேரடி விதைப்பு செய்த 21 நாட்கள் கழித்து அளவீடுகள் எடுக்க வேண்டும்.
- பூப்பூக்கும் பருவத்திற்கு முன் வரை, வார இடை - வெளியில் அளவீடுகள் எடுக்க வேண்டும். செடியின் மேலிருந்து மூன்றாவது இலையில், காலை 8-10 மணிக்குள், அளவீடுகளை 10 இடத்தில் எடுக்க வேண்டும்.
- 10க்கு 6 அளவீடுகள் குறிப்பிட்ட வண்ண மதிப்பிற்குக் குறைவான மதிப்பீட்டைக் காட்டினால் தழைச்சத்துகளை இட வேண்டும்.
- வெள்ளைப் பொன்னிக்கு இலை வண்ண அட்டையின் குறிப்பிட்ட மதிப்பு 3. மற்ற ரகங்கள் மற்றும் வீரிய ரகங்களில் 4க்கு குறைவாக வண்ணம் காணப்பட்டால் தழைச்சத்து இட வேண்டும்.
- வறண்ட நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 35 கிலோ தழைச்சத்து மற்றும் 30 கிலோ தழைச்சத்துக்களை இறவைப் பருவத்திலும் இட வேண்டும்.
- மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகவும்.