Sugarcane (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 23, புதுடெல்லி (Agriculture Tips): கரும்பில் (Sugarcane) குலோமெரெல்லா டுகுமெனன்சிஸ் எனும் பூஞ்சை தாக்குவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இதன் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாமல் கரும்பு முதிரும் போது தான் தெரியும். செவ்வழுகல் நோய் தாக்கினால் 21 நாள்களுக்கு பின்னரே தெரியவரும். இலைத்தாளில் காணப்படும் பூஞ்சை தொற்று தனியாகவோ அல்லது குழுவாகவோ கற்றைகளுக்கிடையே மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிவப்பு பழுப்பு புள்ளிகளுடன் வரிகளைத் தோற்றுவித்தபடி காணப்படும். கரும்பின் உட்பகுதி சிவப்பு நிறமாகி புளித்த வாடை வீசும். International Sign Language Day 2024: எண்ணத்தை பிரதிபலிக்கும் சைகை மொழி.. இன்று சர்வதேச சைகை மொழிகள் தினம்..!

செவ்வழுகலைத் தவிர்க்க:

  • இதைத் தவிர்க்க நோயினால் பாதிக்கப்படாத பகுதியிலிருந்து கரணைகளைத் தேர்வு செய்து நட வேண்டும். நோய் கண்ட வயல் வழியாக நீர்ப் பாய்ச்சுவதைத் தடுக்க வேண்டும். நோய் தோன்றிய நிலத்தில் தொடர்ந்து கரும்பு பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • 1 கிராம் கார்பன்டாசிம் (25 DS), 2.5 கிலோ யூரியாவுடன் சேர்த்து 250 லிட்டர் தண்ணீரில் கலந்து கரணைகளை 5 நிமிடத்திற்கு நனைத்து நட வேண்டும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியுடைய கோ 86249, கோ 85019, கோ.கு 93076, கோ.சி 95071, கோ.க 98061, கோ.க 99061 மற்றும் கோ.க 22 இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும்.