IPL Auction 2025 Live

Paal Kozhukattai Recipe: கிருஷ்ணருக்கு பிடித்த பால் கொழுக்கட்டை சுவையாக செய்வது எப்படி..?

கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு பிடித்தமான பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Paal Kozhukattai (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 24, சென்னை (Kitchen Tips): கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi 2024)ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகின்ற சிறப்பு வாய்ந்த விழாவாகும். இந்த ஆண்டு வருகின்ற ஆகஸ்ட் 26-ஆம் தேதி வருகின்றது. அன்றைய தினம் கிருஷ்ணருக்கு (Krishna Janmashtami 2024) பிடித்தமான இனிப்பு, கார வகை உணவுகளை படைத்து வழிபடுவார்கள். அந்தவகையில், கிருஷ்ணருக்கு பிடித்த சுவையான பால் கொழுக்கட்டை (Paal Kozhukattai) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்

தேங்காய் பால் - 5 கப்

வெல்லம் - 3 கப்

நெய் - 3 தேக்கரண்டி

தேங்காய் - 1 (துருவியது)

முந்திரி திராட்சை - சிறிதளவு

ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் - அரை கரண்டி

தண்ணீர் - 3 கப்

உப்பு - தேவையான அளவு. Krishna Janmashtami 2024: கிருஷ்ண ஜெயந்தி விழா.. வழிபாட்டு முறையும், விரத பலன்களும்..!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்னர், மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, இதில் பால் தண்ணீர் கலவையை சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும்.

கொழுக்கட்டை மாவு தன்மை வந்த பிறகு, கைகளில் நெய் தடவி மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். பின்னர், ஒரு கடாயில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை உருக்கவும்.

ஒரு கடாயில் தேங்காய் பால் சேர்த்து கொண்டு, அதில் வெல்லம் பாகுவை சேர்த்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான பிறகு அதில், உருண்டைகளை சேர்க்கவும்.

அதனை சிறிது நேரம் கிளறி விட வேண்டும். அது கெட்டியான தன்மை வந்தவுடன், அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து, துருவிய தேங்காயை தூவிவிட வேண்டும். அவ்வளவுதான், கிருஷ்ணருக்கு பிடித்த சுவையான பால் கொழுக்கட்டை ரெடி.