How to Make Rose Water: வீட்டிலேயே 'ரோஸ் வாட்டர்' தயாரிப்பது எப்படி? விபரம் உள்ளே..!
ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரில் சருமழகை மேம்படுத்தும் நிறைய பண்புகள் உள்ளன.
ஆகஸ்ட் 15, புதுடெல்லி (New Delhi): ரோஸ் வாட்டர் (Rose Water), ரோஜா இதழ்கள் மூலம் தயாரிக்கும் திரவம் ஆகும். இந்த ரோஸ் வாட்டர் வாசனைத்திரவங்கள், அழகு சாதனப்பொருட்கள், என அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் வாட்டர் அனைத்து சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். சருமம் சிவத்தல், முகப்பரு, முக அலர்சி, போன்ற சரும பிரச்சனைகளுக்கும், சரும பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. தினமும் இரவில் தூங்க செல்லும் முன் முகத்தை கழுவிவிட்டு, பஞ்சில் இரண்டு துளிகளை விட்டி முகத்தை துடைத்தால் முகத்தை பொலிவாக்கும். இதை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்யலாம். Benefits of Wearing a Sports Bra: மார்பகங்கள் தொய்வா? அப்போ ஸ்போர்ட்ஸ் ப்ரா ட்ரை பண்ணுங்க..!
ரோஸ் வாட்டர் தயாரிப்பு: பூவிலிருந்து பிரிக்கப்பட்ட ஃப்ரெஸான ரோஜா இதழ்கள் 3 கப் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் இட்டு இது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். இதழ்கள் நிறங்களை இழக்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் தண்ணீரில் பிங்க் நிறமாக மாறியபின் அதை எடுத்து ஆறவிட்டு துணிமூலம் வடிகட்டி இதழ்களை தனியே எடுத்துவிட வேண்டும். இந்த நீரை தேவையான பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிஜில் ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.