செப்டம்பர் 08, சென்னை (Health Tips): அழகுக்காக பயன்படுத்துவதை தவிர்த்து பூக்களுக்கு இயற்கையாக பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. பாரம்பரிய மருத்துவத்தில் பூக்களின் மருத்துவ குணங்கள் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது. இது காயங்களை ஆற்றவும், உடல் நலனை மேம்படுத்தவும் உதவி செய்கிறது. பூக்களில் இருக்கும் வைட்டமின்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்ற எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியவை.
செம்பருத்தி பூ :
செம்பருத்தி பூ வைட்டமின் சி அதிகம் கொண்டது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும் பண்பு செம்பருத்தியில் உண்டு. உடலுக்கு கேடான கொழுப்பு குறைக்கப்படும் உடல் வீக்கத்தை குறைப்பதோடு உடலில் இருக்கும் கழிவுகளும் வெளியேற்றப்படும். இதனை தேநீர் போலவும் குடிக்கலாம். வெறும் வாயிலும் சாப்பிடலாம். Paracetamol: பாராசிட்டமால் மாத்திரைகளால் இதயநோய் ஆபத்து.. ஆய்வில் வெளியான புது தகவல்.!
சாமந்திப்பூ :
சாமந்திப்பூவை தேநீராக அல்லது எண்ணையாக பயன்படுத்துவது நல்லது. இதில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்பு முகப்பரு, சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். காயங்கள் விரைந்து ஆறும். செரிமானத்தை தூண்டவும் இது நல்லது. உடலில் உள்ள செல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சாமந்தி பயன்படுகிறது. மாதவிடாய் நாட்களில் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.
ரோஜாப்பூ :
ரோஜாப்பூ பெண்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது. இது உடலில் மனசோர்வு, மன அழுத்தத்திற்கு எதிரான பண்புகளை ஊக்குவிக்கும். சருமத்தில் ஆரோக்கியத்தை அதிகரித்து பளபளப்பை ஏற்படுத்தும். உடலை குளிர்ச்சியூட்டும் பண்பு கொண்ட ரோஜாப்பூ, செரிமான சிக்கலுக்கு நிவாரணம் தரும். ஹார்மோன் சமநிலை பிரச்சனைக்கும் தீர்வாக அமையும். ரோஜா பூவின் இதழை உலர்த்தி இனிப்புகளில் நிறமூட்டியாகவும் பயன்படுத்தலாம். ரோஜா பூ இதழை வைத்து இயற்கையான ரோஸ் மில்க் போன்றவையும் தயாரித்து பயன்படுத்தலாம்.
வாழைப்பூ :
இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகம் கொண்ட வாழைப்பூ ரத்த சோகைக்கு சிறந்த தீர்வை தரும். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி செரிமானத்தை ஊக்குவிக்கும். மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வாழைப்பூவின் பங்கு அளப்பரியது. உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்.