Jelly Fruit Cake Recipe: பழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செஞ்சு கொடுங்க.. தயிர் ஜெல்லி ஃப்ரூட் கேக் செய்வது எப்படி? விபரம் உள்ளே.!

இப்பதிவில் ஜெல்லி கேக்கின் எளிய செய்முறையைப் பார்ப்போம்.

Jelly Fruit Cake (Photo Credit: YouTube)

செப்டம்பர் 30, சென்னை (Cooking Tips): விடுமுறை நாட்களில் ஓர் அற்புதமான ஜெல்லி கேக்கை (Jelly Fruit Cake) வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையானப் பொருட்கள்:

அகர் அகர் - 7 கி

சர்க்கரை - 100 கி

பால் - 150 மி.லி

தயிர் - 350 கி

பிடித்தமான பழங்கள் (மாம்பழம், திராட்சை, ஸ்ராபெரி, ஆரஞ்ச், ஆப்பிள்.. ) Mutton Biryani: சுவையான மட்டன் பிரியாணி, இந்த ஸ்டைலில் செய்து அசத்துங்க.. சமையல் டிப்ஸ் இதோ.!

செய்முறை:

பிடித்தமான பழங்களை சமமான துண்டுகளாக நறுக்கி சிலவற்றை மட்டும் எடுத்து கேக் செய்ய போகும் பாத்திரத்தில் அழகாக ஆங்காங்கே அடுக்க வேண்டும். இது தான் கேக்கை திருப்பினால் மேல் பக்கத்தில் வரும். ஒரு பாத்ட்திரத்தில் சர்க்கரை அகர் அகரைப் போட்டு அதில் பால் மற்றும் 50 மி.லி அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இவற்றை கலந்த பின் மிதமான சூட்டில் கலக்க வேண்டும். கொதி வர ஆரம்பிக்கும் நிலையில் அதில் தயிரை சேர்த்து 2 நிமிடத்திற்கு கலக்க வேண்டும்.

பின் அதில் நறுக்கிய பழங்களை போட்டு கிளரி, அடுப்பிலிருந்து இறக்கவேண்டும். இந்த கேக் கலவையை ஏற்கனவே பழங்கள் அடுக்கி வைத்த பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இதை 3 முதல் 4 மணிநேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின் அதை எடுத்து கத்தியை கேக்கை சுற்றி லேசாக விட்டு எடுத்து தட்டில் கவிழ்த்தினால் தயிர் ஜெல்லி ஃப்ரூட் கேக் ரெடியாகிவிட்டது சிறிய துண்டுகளாக வெட்டு எடுத்து சுவைக்கலாம்.