Vegetable Soup Recipe: ஒரு முறை காய்கறி சூப் இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!

கலவையான காய்கறிகளைக் கொண்டு அருமையான வெஜிடபிள் சூப் எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

Soup (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 22, சென்னை (Kitchen Tips): இன்றைய குழந்தைகள் காய்கறிகளை கண்டாலே ஓடி ஒளிந்து விடுகிறார்கள். வளரும் குழந்தைகளுக்கு காய்கறிகள் மிக இன்றியமையாத ஊட்ட சத்தினை தருகிறது. காய்கறிகளை பொரித்தோ அல்லது அவித்தோ கொடுக்காமல், சுவையான முறையில் சூப் செய்து கொடுங்கள். கலவையான காய்கறிகளைக் கொண்டு அருமையான வெஜிடபிள் சூப் (Vegetable Soup) எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கேரட் - ½ கப்

பீன்ஸ் - ½ கப்

கான் - ½ கப்

முட்டைகோஸ் - ½

பட்டாணி - ½ கப்

வெண்ணெய் - 1 ஸ்பூன்

பூண்டு - 3

வெங்காயம் - ¼ கப்

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்

மக்காசோள மாவு - 1 ஸ்பூன்

மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

உப்பு Egg Puffs Recipe: வீட்டிலேயே சுவையான முறையில் முட்டை பப்ஸ் செய்வது எப்படி..?

செய்முறை:

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கான், முட்டைகோஸ் மற்றும் அரைமணி நேரம் ஊறவைத்த பட்டாணி, மஞ்சள்தூள் போன்ற காய்கறிகளுடன் உப்பு சேர்த்து குக்கரில் இவைகள் நிறம்பும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரை வரும் வேகவிட வேண்டும். அதன் பின் ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பின் அதில் வேகவைத்த காய்கறி கலவையை ஊற்ற வேண்டும். அதில் அரைகப் தண்ணீரில் மக்காசோள மாவை கட்டியில்லாமல் கரைத்து எடுத்து ஊற்ற வேண்டும் தேவைக்கேற்ப மிளகுத்தூளை சேர்த்து 3 நிமிடத்திற்கு மூடி போட்டு வேகவிட வேண்டும். பின் அதை இறக்கி மல்லியிலை போட்டு பௌலில் ஊற்றி சுவைக்கலாம்.