IPL Auction 2025 Live

Soil Quality: சர்வே எண் இருந்தால் போதும்.. மண்ணின் தன்மையை மொபைலில் தெரிஞ்சுக்கலாம்..!

சர்வே எண் மூலம் மண் தன்மை அறியலாம்.

Soil (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 18, புதுடெல்லி (Agriculture Tips): வேளாண்மை நலத்துறை சார்பில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக "தமிழ் மண்வளம்" எனும் புதிய இணையதளத்தினை அறிமுகப்படுத்தி முதல்வர் தொடங்கியுள்ளார். World Bamboo Day 2024: உலக மூங்கில் தினம்.. பச்சைத் தங்கத்தின் சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறிந்துக் கொள்வோமா?!

தமிழ் மண்வளம்: விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும் வகையில் இந்த ‘தமிழ் மண்வளம்’ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று விவசாயிகள், தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், நிலத்தின் புல எண், புட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், அந்த மண்ணின் வளத்தை குறித்த அனைத்து விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மண்வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும். இதில் மண்டல வாரியாகவும், வட்டாரம் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் மண்ணின் வகைகள் தரப்பட்டுள்ளன. இதில் மண்ணின் தன்மை, நிலத்தடி நீரின் வகைப்பாடு, அமில நிலை, அங்ககக் கரிமம், சுண்ணாம்பு, சாம்பல், மணி, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு தழைசத்துக்கள் போன்ற

நுண்ணூட்ட விவரங்களும் அடங்கும்.

இணையதளம்: http://tnagriculture.in/mannvalam