செப்டம்பர் 18, புதுடெல்லி (Special Day): 2009-ம் ஆண்டு பாங்காக்கில் உலக எட்டாவது மூங்கில் மாநாடு (World Bamboo Congress- WBC) நடந்தது. அன்று முதல் செப்டம்பர் 18 ஆம் நாள் உலக மூங்கில் தினமாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் உலக மூங்கில் தினமாகக் (World Bamboo Day) கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற மரத்தை விடவும் இந்த மரத்தின் நன்மைகளுக்காகவும் பயன்களுக்காவும், அதனை அனைவரும் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காகவே இந்த தினம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பச்சைத் தங்கத்தின் சுவாரஸ்ய தகவல்கள்: பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம், வனத்தின் வாழ்வாதாரம் என்றழைக்கப்படும் மூங்கில், தாவர உலகின் அதிசயங்களில் ஒன்று. விரைவாக வளரும் தன்மை, பல்துறை பயன்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு தன்மை ஆகியவற்றால் இது புகழ்பெற்றது. மற்ற மரங்களை விட மிக வேகமாக வளரும் தன்மை கொண்டது. இதனால், மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க உதவுகிறது. Periyar Birthday: "ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல.. புரட்சி செய்ய.." தந்தை பெரியார் பிறந்த தினம்..!
மூங்கில்கள் வீடுகள், பாலங்கள், தளபாடங்கள் போன்றவற்றை உருவாக்க பயன்படுகிறது. மூங்கில் குருத்து சில நாடுகளில் ஒரு பிரபலமான உணவு பொருள். மூங்கில் விதைகளிலிருந்து எடுக்கப்படும் பருப்புகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. மூங்கில் மரங்கள் அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. மூங்கில் வேர்கள் மண்ணை பிணைத்து வைத்து மண் அரிப்பை தடுக்கிறது. மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் மிகவும் வலுவானவை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவை. கிட்டத்தட்ட 1500 வகையான பயன்களை மூங்கில் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
மூங்கில் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதல் இடத்தில் உள்ளது. சீனாவைக் காட்டிலும் இந்தியாவில் மூங்கில் பயன்பாடுகள் குறைவாகவே இருக்கிறது. இந்தியாவில் சில இடங்களில் முறம், குடை, கீத்து உள்ளிட்டவைக்கே மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் நாற்காலி, ஷோபா, கதவு, ஜன்னல் உள்ளிட்டவையை மூங்கில் மூலம் தயாரித்து வருமானத்தை ஈட்டுகின்றனர். இந்தியாவில் மூங்கில் குறித்து விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. வீட்டில் இடம் இருந்தாலும் மூங்கில் வளர்க்கலாம். அதற்காக முள்ளில்லா மூங்கில் ரகங்கள் கிடைக்கின்றன. சூழலுக்கு இத்தனை பயன்களைத் தரும் மூங்கிலைப் போற்ற வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கம்.