Thoothuvalai Soup Recipe: மருத்துவ குணமுடைய தூதுவளை சூப் செய்வது எப்படி? விவரம் உள்ளே..!
மருத்துவ குணமுடைய தூதுவளை சூப் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஆகஸ்ட் 05, சென்னை (Kitchen Tips): பருவ மழையால் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, இருமல் வருகிறது. இதுபோன்ற சமயத்தில் பாரம்பரிய நாட்டு மருத்துவ முறைகளை உணவின் வழியாக கொடுக்கும்போது பக்கவிளைவுகளின்றி பிரச்னைகளை தவிர்க்கலாம். சளி ,இருமல் இல்லை என்றாலும் இந்த தூதுவளை சூப் (Thoothuvalai Soup) வைத்து சாப்பிடுங்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தூதுவளை - 1 கப்
பாசிப்பருப்பு - ¼ கப்
கேரட் - 1
பூண்டு - 4
வெண்ணெய் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன் Soft Drinks: குளிர்பானம் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனை; அதிர்ச்சியை தரும் பகீர் தகவல்.!
செய்முறை: ஒரு கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து ந.சின்னவெங்காயம், பூண்டு, ந.தக்காளி, தூதுவளை இலை போட்டு வதக்கவும்.அதில் ஊறவைத்த பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். கொதித்து வந்தவுடன் ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை கடாயில் ஊற்றியில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, உப்பு, துருவிய கேரட் போட்டு 3 நிமிடத்திற்கு கொதிக்க விட்டு எடுத்தால் தூதுவளை சூப் தயார்.