Guide to Radish Farming: முள்ளங்கி சாகுபடி.. மண்ணிற்கும் மனிதனுக்கும் சத்துகள் அளிக்கும் இயற்கை விவசாயி..!

விவசாய செலவுகளை சமாளிக்க வரப்பு ஓரங்களில் முள்ளங்கி சாகுபடி உதவும்.

Radish (photo Credit: Pixabay)

மே 23, புதுடெல்லி (New Delhi): இயற்கை விவசாயம் செய்து நல்ல சத்துக்களை பிறருக்கு அளிப்பதே சிறந்த விவசாயமாக கருதி பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்து காய்கறிகளை விளைவித்து வருகிறார் தென்காசியை சேர்ந்த இயற்கை விவசாயி மாரியப்பன். பாரம்பரை விவசாயான இவர், கீரை வகைகள், முள்ளங்கி, தென்னை பயிர்களை முதன்மை பயிராக செய்து வேளாண்மை வருகிறார். எந்த ஒரு கீரையாக இருந்தாலும், முதல் பட்டத்தில் 40 நாட்கள் விலைந்திருந்த கீரையில் தான் அதிகளவு சத்துகள் இருக்கும் அதைத் தான் சாப்பிடவும் வேண்டும் என அறிவுறுத்துவதுடன் முள்ளங்கியும் ஒரு வகையில் கீரை வகையைச் சேர்ந்தது என்று விவரிக்கிறார்.

முள்ளங்கி வளர்ப்பு: முள்ளங்கியை நடவு செய்வதற்கு முன் (Radish Farming) நிலத்தை தொழுவுரம் இட்டு நன்கு ஆழ உழவு செய்து, 15 நாட்கள் இடைவேளி விட வேண்டும். பின் மீண்டும் ஒரு முறை உழுது, பாத்திகள் அமைத்து முள்ளங்கி விதைகளை தூவ வேண்டும். பின் லேசாக மண்ணை கிலரி விட வேணும் பின் உயிர் தண்ணீர் அளிக்க வேண்டும். அல்லது மேட்டு பாத்தி அமைத்து விதைகளை நடவு செய்து தண்ணீர் விடலாம்.

முள்ளங்கிக்கு அதிகளவு உரங்கள் தேவைப்படாது. மண் வளம் குறைவாக இருந்தால் மட்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை இயற்கை உரங்களை அளிக்கலாம். செடிகளுக்கு மட்டும் சரியான நேரத்தில் தண்ணீரை அளித்து வந்தால் போதுமானதே. முள்ளங்கி 35 நாட்களிலேயே அறுவடைக்கு தயாராகி விடும். 40 நாட்களிலிருந்து நிலத்தை விட மேலே கிழங்குகள் நன்கு வளர்ந்து காணப்படும் முள்ளங்கியை மட்டும் அறுவடை செய்யலாம். முள்ளங்கியை பெரிய அளவில் வளர விட்டால் அதன் எடை அதிகமாகுமே தவிர அதன் சத்துக்கள் குறையும். அதனால் மீடியம் சைஸில் இருக்கும் போதே முள்ளங்கியை அறுவடை செய்வது நல்லது என்று லாபம் விட சத்தான காயை தர வேண்டும் என ஊக்குவிக்கிறார். Ilaiyaraja Sends Legal Notice To Manjummel Boys: "கண்மணி அன்போடு காதலன்.." மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா..!

தரமற்றவை வேண்டாம்: முள்ளங்கியில் பிற செடிகளில் போன்றில்லாமல் குறைவான பூச்சி தாக்குதலே நடைபெறும். வெள்ளி பூச்சிகள் முள்ளங்கி கீரையில் அடியில் காணப்படும். இவைகள் வெப்பங்கரைசல் தெளித்தே கட்டுப்படுத்தலாம். ஆனால் இயற்கை விவசாயியான மாரியப்பன், பூச்சி தாக்குதல் ஏற்படால் தரமில்லாத பொருளை விற்கக் கூடாது என, அவைகளை அறுவடை செய்யாமல், செடிகளை சேர்த்து உழவு ஓட்டி அடுத்த பயிருக்கு விதைக்க நிலத்தை தயார் செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். மேலும் இவர் இயற்கை முறை கீரைகளையும், சுத்தமான கலப்படம் இல்லாத தேங்காய் எண்ணையும் விற்பனை செய்து வருகிறார்.

குறைந்த லாபம் நிறைந்த மகிழ்ச்சி: இயற்கை முறையில் விலைந்த காய்களை சரியான இடத்தில் விற்பனை செய்தால் நல்ல லாபமும் எதிர்பார்க்கலாம். ஆனால் மாரியப்பன், மன மகிழ்ச்சிக்காக உள்ளூரிலேயே சில்லரை வியாபாரிகளுக்கு மூன்று முள்ளங்கி, 5 ரூபாய் என்ற குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். இயற்கையிலேயே, 40 செண்டில் பயிர் செய்யும் முள்ளங்கி 1 முதல் 2 டன் வரை எடுக்கலாம் கிலோ 10 ரூபாய்க்கு விற்றால் கூட அது நல்ல லாபமாக விவசாயிகளுக்கு இருக்கும் என நம்பிக்கையும் அளிக்கிறார் மாரியப்பன்.