Ilaiyaraja Sends Legal Notice (Photo Credit: @chennaivision X)

மே 23, சென்னை (Cinema News): கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் எனும் சிறிய ஊரில் இருந்து 11 நண்பர்கள் தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். குணா படத்தின் மூலம் பிரபலமான குணா குகையை சுற்றிப்பார்க்க சென்றபோது 11 பேரில் ஒருவர் அந்தக்குகையில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் (Manjummel Boys) திரைப்படத்தின் கதை. 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில், இளையராஜாவின் கண்மணி அன்போடு காதலன் பாடல்தான் டைட்டில் கார்டில் வருகிறது. படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் இந்தப்பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி வரும், அது படம் பார்க்கும் அனைவருக்கும் கூஸ்பம்ப்ஸைத் தருகிறது. தான் இசையமைத்த பாடல்கள் இப்போது வரும் படங்களில் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான விமர்சனங்களை கூறி வருபவர் தான் இளையராஜா. Jitendra Primo Launched: ஜிதேந்திரா பிரைமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்.. அதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!

இளையராஜா நோட்டீஸ்: இளையராஜாவின் இந்த நடவடிக்கை நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியிருந்த நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு, இளையராஜா தரப்பில் இருந்து அவருடைய வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அந்த நோட்டீசில், “பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார். அதனால் அவரிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும். பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.