IPL Auction 2025 Live

Physically Inactive Indians: உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்தே இருக்கும் இந்தியர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலை பின்பற்றுவதில்லை என்று ஆய்வுத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Indians (Photo Credit: Pixabay)

ஜூன் 26, புதுடெல்லி (New Delhi): லான்செட் குளோபல் ஹெல்த் பத்திரிக்கை தற்போது ஒரு ஆய்வினை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) வழிகாட்டுதலை பின்பற்றுவதில்லை என்று கூறியுள்ளனர். அவர்கள் ஆய்வு பணி 195 நாடுகளில் பொதுவான உடல் உழைப்பு இல்லாத நாடுகளில் இந்தியா பனிரெண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம் ஆண்களை விட அதிகமான பெண்கள் உடல் ரீதியாக செயலற்றவர்களாக இந்தியாவில் உள்ளனர். கடந்த 2000 ஆண்டில் உடல் உழைப்பை இல்லாதவர்களின் எண்ணிக்கை 22.3 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால் அது 2022ல் 49.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறே சென்றால் 2030ல் 60% ஆக இது உருவெடுக்கும் என்று ஆய்வு தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.

காரணங்கள்: ஒருவர் வாரத்தில் குறைந்தபட்சம் 150 முதல் 300 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் பலர் உடல் செயல்பாடு இல்லாதவர்களாக உள்ளனர். காரணம் அவர்களின் வேலை முறைகளாகும். பலர் அதிகம் உட்கார்ந்து பார்க்கக்கூடிய வேலைகளை பார்க்கின்றனர். மேலும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், போக்குவரத்து, ஓய்வு நேரம் நடவடிக்கை இவையெல்லாம் கூட காரணமாக அமைகின்றனர் என உலக சுகாதார அமைப்பின் சுகாதார மேம்பாட்டு இயக்குனர் டாக்டர் துடிகர் கிரெஷ் கூறியுள்ளார். Cooking Tips: சமையலில் ராணியாக வேண்டுமா? அப்போ உங்களுக்கான சில டிப்ஸ்கள் இதோ..!

உடல் உழைப்பின் முக்கியத்துவம்: இந்தியர்களுக்கு இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற தொற்று நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதற்குக் காரணம் அவர்களின் மரபணு ஆகும். இது குறித்து புனேவைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரும் உடற்பயிற்சி உடலில் நிபுணருமான மைத்ரேயி போகில் கூறியதாவது, உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, வீட்டு வேலைகள் செய்வது, சிறிது தூரம் நடப்பது போன்ற பழக்கங்களை வாடிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இது உடல் ஆரோக்கியத்தை பேண உதவியாக இருக்கும்" என்கிறார்.