Cooking (Photo Credit: Pixabay)

ஜூன் 25, சென்னை (Kitchen Tips): சமையல் (Cooking) என்பது முழு மனத்துடன் ஈடுபாடு காட்டி செய்யவேண்டிய ஒரு அருமையான கலை. பல்வேறு நுணுக்கங்கள் அதில் அடங்கியுள்ளன. சின்னச்சின்ன விஷயங்கள் கூட உங்கள் சமையலை மிகச் சிறப்பாக்கிவிடும். இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள இனிய சமையல் குறிப்புகள் (Tips) குறித்து இங்கு காணலாம். TN Weather Update: இன்று கொட்டப்போகும் கனமழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

சமையல் குறிப்புகள்:

  • சாம்பார் வைக்கும் போது புளிப்பு சுவை அதிகரித்துவிட்டால் சிறிது வெல்லம் அல்லது ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை சேர்த்தல் புளிப்பு சுவை தெரியாது.
  • சாம்பாரை மேலும் சுவையாக்க, சாம்பார் இரக்கையில் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது பட்டர் சேர்க்க வேண்டும்.
  • இளம் தேங்காய் சில்லை பிரிக்க, அரைமூடி தேங்காயை அடிப்பக்கமாக 4 நிமிடத்திற்கு அடுப்பில் வைக்க வேண்டும். இனி இதை சுலபமாகப் பிரிக்கலாம்.
  • மீதமான சப்பாத்தியை மீண்டும் மிருதுவாக்க இட்லி கூக்கரில் ஒரு 5 நிமிடத்திற்கு வேகவிடலாம்.
  • புட்டு மாவு பினைவதற்கு சுடு தண்ணீரில் உப்பு மற்றும் நெய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பினைய வேண்டும்.
  • பினைந்த புட்டு மாவில் கட்டிகள் இருந்தால் உலர்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால் உதிரி உதிரியாக மாவு கிடைக்கும்.