Monkeypox: உலகெங்கும் பரவும் குரங்கு அம்மை: அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!

இந்த நோயை எம்பாக்ஸ் என்றும் அழைக்கின்றனர்.

MPOX (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 23, சென்னை (Health TIps): உலக நாடுகளிடையே குரங்கு அம்மை (Mpox) பரவல் அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்த நோய், தற்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் இந்த பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, விமான நிலையங்கள், எல்லைகளில் பயணிகளுக்கான பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியா உள்பட 115 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரங்கு அம்மை: எம்-பாக்ஸ் தொற்று என்பது 1958 இல் டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளிடையே முதலில் கண்டறியப்பட்டதால் மங்க்கி பாக்ஸ் என்று பெயரில் வழங்கப்பட்டு வந்தது. 1970 இல் ஆப்ரிக்க நாடான காங்கோவில் முதன் முதலில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனால் இது புதிய நோய் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குரங்கு அம்மை (Monkeypox) தட்டம்மை குடும்பத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. MPox Variant: அச்சச்சோ.. பேராபத்து.. கொரோனா போல உருமாறியது குரங்கம்மை.. இந்தோனேஷியாவில் அதிர்ச்சி..!

அறிகுறிகள்: காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் போன்றவை பொதுவான அறிகுறிகளாக உள்ளன. கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், உணர்வு மாற்றம், வலிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

சிகிச்சை: க்கு இன்னும் குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு (WHO) வலி மற்றும் காய்ச்சல் போன்ற அதன் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்து கொடுக்குமாறு பரிந்துரைக்கிறது. மேலும் குரங்கு அம்மை அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் ஆரம்ப கட்டத்திலே மருத்துவரை அணுகுவது நல்லது. தொடக்கத்திலே சிகிச்சை எடுத்து கொண்டால் குணமடைய வாய்ப்புள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: