Does Cancer Cause Night Sweats?: இரவில் ரொம்ப வியர்க்குதா? புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.. வெளியான பகீர் தகவல்..!
இரவில் அதிக வியர்வை வருகிறது எனில் அது மற்ற நோய் காரணங்களின் அறிகுறியாக இருக்கலாம்.
ஆகஸ்ட் 08, சென்னை (Health Tips): இந்த நூற்றாண்டில் கடுமையாகப் பரவி வரும் மிகக் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோய் உலகின் மிக ஆபத்தான கொலைகார நோயாக மாறிவிட்டது. மேலும் முதல் முறை புற்றுநோய் (Cancer) பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு 2வது முறை கேன்சர் வர பல வாய்ப்புகள் உள்ளது. இப்படிப்பட்ட புற்றுநோயானது இந்தியாவில் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
புற்றுநோய் அறிகுறி: லிம்போமா போன்ற சில புற்றுநோய்களின் ஆரம்பகால அறிகுறியாக இரவில் அதிக வியர்வை வெளியேறும். அதேபோல் கண்டறியப்படாத புற்றுநோயின் அறிகுறிகளில் இரவில் வியர்வை வெளியேறுதலும் ஆரம்ப கால அறிகுறிதான். வியர்வையுடன் உடல் எடை இழத்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் இருக்கும். ஆனால் பலரும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. காலையில் கண் விழித்ததும் முதல் வேலையாக உங்கள் படுக்கையை சோதித்துப் பாருங்கள். International Cat Day 2024: "எகிப்தில் கடவுள்.. உண்மையில் ராஜா.." சர்வதேச பூனைகள் தினம்..!
இரவில் தூங்கும் போது அதிகமான வியர்வை வந்திருந்தால் இதில் தெரிந்துவிடும். ஏன் இப்படி கூறுகிறோம் என்றால், நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது வியர்த்திருப்பது உங்களுக்கு தெரியாது. ஆனால் அதிகமாக வியர்வை வந்திருந்தால், நிச்சியம் உங்கள் படுக்கை விரிப்பும், தலையணையும் நன்றாக நனைந்திருக்கும். காலையில் பார்க்கும் போது இதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.