ஆகஸ்ட் 23, நியூ ஹம்ப்ஷயர் (World News): அமெரிக்காவில் உள்ள நியூ ஷம்பயர் நகரில் வசித்து வருபவர் ரியான் லாங் (வயது 48). இவரின் மனைவி எமிலி லாங் (வயது 34). தம்பதிகளுக்கு பார்க்கர் (வயது 8), ரியான் (வயது 6), 3 வயதுடைய குழந்தை என 3 பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல உடல்நலத்துடன் இருந்த ரியான், புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்துள்ளார். எமிலியும் நல்ல வேளையில் இருந்த நிலையில், கணவரை கவனித்துக்கொள்ள அதனை விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் இருந்த ரியானின் உடல்நலம் தொடர்ந்து மோசமான காரணத்தால், படுத்த படுக்கையாகி இருக்கிறார். Ranil Wickremesinghe: நிதி முறைகேடு புகார்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது..!
புற்றுநோயால் விபரீதம்:
நிதிச்சுமை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட எமிலி, கணவரை கொலை செய்து தற்கொலை செய்துகொள்ளலாம் என விபரீத முடிவுக்கு வந்துள்ளார். வீட்டில் படுக்கையில் இருந்த கணவரை பலமுறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த பெண்மணி, தனது முதல் 2 குழந்தைகளை சுட்டுகொன்றுள்ளார். பின் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் நேரில் வந்த அதிகாரிகள், வீட்டில் சடலமாக இருந்தவர்களின் உடலை மீட்டனர். மேலும், 3 வயதுடைய சிறுவனை உயிருடன் காப்பாற்றினார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கணவரை கொன்று மனைவி தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.