Post Office Saving Schemes: நேர வைப்புக் கணக்குத் திட்டம்.. அதன் பயன்கள் என்னென்ன?.!

நேர வைப்புக் கணக்குத் திட்டம் என்பது இந்திய அரசால் நடத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டமாகும்.

Saving Schemes (Photo Credit: Pixabay)

ஜூலை 04, புதுடெல்லி (New Delhi): தபால் நிலையங்களில் (Post Office) பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மக்கள் தற்போது வங்கிகளை போல் தபால் நிலைய திட்டங்களில் இணைந்து பணத்தை சேமித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தபால் நிலைய திட்டங்கள் நேரடியாக மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவது தான்.

நேர வைப்புக் கணக்குத் திட்டம்: இந்திய தபால் துறையின் நேர வைப்புக் கணக்கு திட்டத்தில் (Post Office Saving Schemes) ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு 5.5% ஆகவும், 5 ஆண்டுகளுக்கு 6.7% வட்டி விகிதத்தில் சேமிப்பு கணக்கை துவங்கலாம். இதில் வருடாந்திர வட்டி கிடைக்கும். 5 ஆண்டுக்கானதில் 1லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஐந்து ஆண்டுகளில் ரூ.39,406 வட்டி கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டுக்கான வட்டியையும் வெறு தொழிலில் முதலீடு செய்யலாம். இத்திட்டம் சுயதொழில் செய்பவர் தங்கள் லாபத்தை இதில் செலுத்தி வைத்தால் எதிர்காலத்தில் உதவும். TN BJP Chief Annamalai Tweets About Gummidipoondi Issue: பட்டா பிரச்சனையில் இளைஞர் தீக்குளிப்பு சம்பவம்.. பொங்கி எழுந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..!

சேமிப்பு அவசியம்: ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. தேவையறிந்து செலவு செய்தும் எதிர்காலத்திற்க்காக சேமித்தும் வாழ வேண்டும். சேமிப்பு வருங்கால தேவைக்கு பெரிதும் கைகொடுக்கும் ஒன்றாகும். சிறுக சிறுக சேமிக்கும் சிறு தொகை கூட எதிர்காலத்தில் பெரிய தேவை தீர்க்கும். அதனால் தான் சிறுவயதில் தாத்தா பாட்டி தரும் பணத்தை உண்டியலில் போட்டு வைக்க சொல்வார்கள். சேமிப்பு பழக்கத்தை சிறு வயதிலிருந்தே கற்க வேண்டும்.