TN BJP Chief Annamalai Tweets About Gummidipoondi Issue (Photo Credit: @k_annamalai X | Insta)

ஜூலை 05, திருவள்ளூர் (Thiruvallur News): திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு முன்பாகவே ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவர் தன் வீடு பத்தாம் இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் வீட்டை இடிக்க முயன்றதால் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டுக்குள் சென்று மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை என்ன தீயை அமைப்பு அவரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தீக்குளித்து ஓடிவரும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்: இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை (TN BJP Chief Annamalai) இதுக்குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட S.V. G புரம் ஊராட்சியில், பட்டா இடத்தில் வீடு கட்டி வசித்து வந்த ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை, எந்த வித முன்னறிவிப்புமின்றி, வீடுகளில் இருந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியில் தள்ளித் துன்புறுத்தி, அத்துமீறி இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு. Taliban Russia's "Allies": தாலிபானுடன் கைகோர்க்கும் ரஷ்யா.. பயங்கரவாதத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கை..!

பட்டா இருந்தும் தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால், ஒதுங்க இடமின்றி, வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் பந்தல் அமைத்து அமர்ந்திருந்த, எட்டு பெண்கள் உட்பட 25 பேரையும் கைது செய்து அத்து மீறியிருக்கிறது காவல்துறை. திருத்தணி யூனியன் பாஜக மண்டலத் தலைவர் திரு வீர பிரம்மச்சாரி மற்றும் ஆர்.கே.பேட்டை மண்டலத் தலைவர் திரு S.K.பாலாஜி ஆகியோரையும் கைது செய்திருக்கிறது திமுக அரசு.

கும்மிடிப்பூண்டியில், பட்டா இடத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை இடித்ததால், இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகும் முன், திருவள்ளூரில் ஐம்பதுக்கும் அதிகமான வீடுகளை இடித்துத் தள்ளியிருக்கிறது திமுக அரசு. திமுகவின் இந்த பொதுமக்கள் விரோத அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதோடு, பட்டா இடத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.