செப்டம்பர் 20, சென்னை (Chennai News): தமிழகத்தில் இரண்டு பெற்றோர்களை இழந்து உறவினரின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகளை அரவணைத்து அவர்களின் பள்ளிப் படிப்பு (School Students Education) இடைநிற்றலை குறைக்க குழந்தைகளின் 18 வயது வரை மாதம் ரூ.2000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (TN CM MK Stalin) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் வாயிலாக பள்ளிப் படிப்பு முடித்ததும் கல்லூரி கல்வியும் மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினர்கள் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள், ஒரு பெற்றோரை இழந்து மற்றொரு பெற்றோரின் பராமரிப்பில் இருக்கும் குழந்தைகளுக்கும், பெற்றோரின் பராமரிப்பில் இல்லாத குழந்தைகளுக்கும் அவர்களின் 18 வயது வரை அன்பு கரங்கள் நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு சார்பில் மாதம் ரூ.2000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க யாரெல்லாம் தகுதி உடையவர்கள் என்பது குறித்து விவரமாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். TVK Vijay Nagapattinam Thiruvarur Campaign: நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் பிரச்சாரம்.. தனி விமானத்தில் புறப்பட்டார்.!
அன்புக் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவர் விவரம் (Anbu Karangal Application Process):
- ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்)
கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொருவர் குழந்தையை கைவிட்டு சென்றால்)
ஆதரவு தேவைப்படும் குழந்தைகள்
அன்புக் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (Anbu Karangal Scheme Documents):
- குடும்ப அட்டையின் நகல்
- குழந்தையின் ஆதார் அட்டை நகல்
- குழந்தையின் வயது சான்று
- குழந்தையின் பிறப்பு சான்று
- குழந்தையின் கல்வி சான்று, மதிப்பெண் சான்று
- குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல்
இந்த ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் (Ungaludan Stalin Camp) அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து பலன் பெறலாம்.