Sex During Periods: மாதவிடாய் நாட்களில் தம்பதிகள் நெருங்காலமா? உங்களுக்கான அந்தரங்க குறிப்புகள் இதோ..!
மாதவிடாய் நாட்களில் தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்குமா என்பதனைக் குறித்து இப்பதிவில் காணலாம்.
ஜூலை 26, சென்னை (Health Tips): காதலும் காமமும் கலந்தவர்கள் தான் மனிதர்கள். இந்த இரண்டையும் தள்ளி வைத்து விட்டு யாராலும் வாழ்ந்து விட முடியாது. இந்த காமத்தில் பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் உண்டு. அதில் ஒரு விஷயம்தான், மாதவிடாய் நேரத்தில் தாம்பத்திய உறவு (Sex) வைத்துக் கொள்ளலாமா என்பது. இந்த நாட்களில் உறவு கொண்டால் கணவனுக்கு ஜன்னி வந்து விடும் என்றெல்லாம் கட்டுக்கதைகள் உண்டு. ஆனால் அவை எதுவும் உண்மை கிடையாது.
தாம்பத்திய உறவு: மாதவிடாய் காலத்தில் (Periods) தாம்பத்திய உறவு தாராளமாக வைத்துக் கொள்ளலாம். மாதவிடாயின் போது வெளியேறுகிற ரத்தம் சுத்தமானது. எந்த கழிவும் இருக்காது. அதனால் உறவு கொள்ளும் போது கணவருக்கு எந்த தீங்கும் தொற்றும் ஏற்படாது. அதே நேரத்தில் மாதவிடாய் நேரத்தில் உறவு வைத்துக் கொள்வதனால் பெண்களுக்கு வரக்கூடிய தசைப்பிடிப்பு, வலி ஆகியவை கட்டுப்படும். ஏனெனில் அப்போது வெளியாகும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் வலி நிவாரணி போல செயல்படும். First Night Tips: உங்கள் முதலிரவு... இனிய இரவாக... சில டிப்ஸ்..!
கருத்தரிக்குமா?: மாதவிடாய் நாட்களில் தாம்பத்திய உறவு கொள்வதனால் கருத்தரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. அதாவது மாதவிடாய் சுழற்சி 24 முதல் 25 நாட்களுக்குள் இருப்பவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். உயிரணுவானது பெண்ணின் பிறப்புறுப்பு பாதையில் ஐந்து நாட்கள் வரை கூட உயிரோடு இருக்கும். எனவே பீரியட்ஸ் முடிந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு கூட அந்த உயிரணு கருமுட்டையுடன் இணைந்து கருவை உருவாக்க கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே குறுகிய கால மாதவிடாய் சுழற்சி உள்ளவர்கள் கருத்தரிக்கும் நிகழ்வு ஏற்படலாம். எனது கருத்தரிக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் பீரியட்ஸ் நாட்களில் உறவு கொள்வதாக இருந்தால் ஆணுறையைப் பயன்படுத்தலாம்.
குறிப்பு & கவனம்: சில பெண்கள் மாதவிடாய் நேரத்தில் தங்களுக்கு இருக்கும் அசௌகரியத்தால் மாதவிடாய் உறவுகளை விரும்புவது இல்லை. அவ்வாறான பெண்கள் துணைகள் வற்புறுத்துவதும் நல்லதல்ல. உடலும்-மனமும் இணையவேண்டிய விஷயத்தில் வற்புறுத்தல் என்பது என்றுமே இருக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும். இதுகுறித்த சந்தேகம் கொண்ட தம்பதிகள், மருத்துவரின் ஆலோசனையை பெற்றுச் செயல்படுவது நல்லது.