Couple Enjoy Bed (Photo Credit: Pixabay)

ஜூலை 18, புதுடெல்லி (New Delhi): ஆயிரம் இரவுகள் வாழ்க்கையில் வந்தாலும், இதுதானே அவர்களுக்கு முதலிரவு! ஒரு பக்கம் எதிர்ப்பார்ப்புகளும் உள்ளக் கிளர்ச்சியும், மறுபக்கம் அச்சமும் படபடப்பும். முதலிரவுக்கு முன்பாக பெரும்பாலான புதுமணத் தம்பதிகளின் நிலை இதுதான். நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறவருடன் உங்களுக்கு முன்பே பரிச்சயம் இருந்தால், உடல்ரீதியாகவும் நெருக்கமாக இருந்திருந்தால், அது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், துணைவர் உங்களுக்கு முன்பே பழக்கமில்லாதவராக இருந்து, நீங்கள் உடலுறவில் ஈடுபடுவது இதுதான் முதல் முறையெனில், முதலிரவில் சிக்கல் கொஞ்சம் அதிகம்தான்.

எத்தனை பயம்?: “என்னால், என் துணைவரை திருப்தி செய்ய முடியுமா?", "என்னைப் பற்றி அவர் என்ன நினைப்பார்?" "நான் என்ன செய்ய வேண்டியிருக்கும்?", “இது அவருக்கு கஷ்டமாக இருக்குமா?" என்றெல்லாம் முதலிரவன்று மனதில் பல அச்சங்கள் முளைக்கலாம். தற்காலத்தில் நகர்ப்புறங்களில் காதல் திருமணங்கள் அதிகரித்தாலும், பெரும்பான்மையான திருமணங்கள் ஏற்பாட்டுத் திருமணங்களாகவே உள்ளன. இந்த நிலையில், முதலிரவு அச்சங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதன் மூலம், இன்பமயமான குடும்ப வாழ்க்கைக்கு நல்ல தொடக்கத்தை அளிக்க முடியும். இதைப் பற்றி தேவையான அறிவை வளர்த்துக்கொண்டு, சரியான தயாரிப்புகளுடன் நம்பிக்கையுடன் முதலிரவில் அடியெடுத்தால், அதை மறக்க முடியாத இரவாக மாற்றலாம். Cave On Moon: "என்னது.. நிலாவில் குகையா?" வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..!

செயல்திறன் பற்றிய சந்தேகம்: ஆண்களிடம் காணப்படும் பொதுவான விஷயம் இது. முதலிரவு அனுபவத்தை நினைத்து கிளர்ச்சியும் படபடப்பும் ஏற்பட்டிருக்கும் என்பதால், சிலருக்கு சீக்கிரமாகவே விந்து வெளியேறிவிடுமோ என்ற பயம். வேறு சிலருக்கோ தங்களைப் பற்றியும், உடலுறவில் தங்கள் 'திறமை' பற்றியும் மனைவியிடம் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்க வேண்டுமென்ற பதற்றம். அமைதியான சூழலில், இருவரும் சம ஆர்வத்துடன் இருந்தால் தான் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியும். எனினும், பெரும்பாலான ஆண்கள், அச்சூழ்நிலையை விட்டுவிட்டு, தாங்கள் எந்த 'வீரியத்துடன்' செயலாற்றுகிறோம் என்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். இது விறைப்புத்தன்மை நீடிப்பதை பாதிக்கலாம். ஆகவே, இந்த டென்ஷனை விட்டுவிட்டு துணைவருடன் ரொமான்ஸ் செய்யவும், நெருக்கமாகவும் இருக்க முயலுங்கள். பதற்றம் இல்லாத நிலையில் உங்கள் பெர்ஃபாமன்ஸும் நன்றாக இருக்கும். Laser Eye Surgery: கண் பார்வையில் பிரச்சனையா? லேசர் கண் சிகிச்சையால் பார்வைத்திறன் மேம்பாடு; விபரம் இதோ.!

வலியை பற்றிய அச்சம்: முதலிரவில் உடலுறவின் போது பெண்ணுக்கு வலி இருக்கலாம். சிலருக்கு இல்லாமல் இருக்கலாம். இருவருக்கிடையிலான புரிந்துணர்வு, அந்த இடத்தின் சூழல், ஒருவரின் மனநிலை, உடல் கிளர்ச்சி/ தூண்டலின் நிலை, முன்விளையாட்டுகளின் தன்மை மற்றும் காலம், ஆணுறுப்பு நுழைக்கப்படுகையில் பெண்ணுறுப்பிலுள்ள ஈரப்பதத்தின் அளவு, கன்னிச்சவ்வின் நிலை, உடலுறவின் நிலை (position) மற்றும் அது நிகழ்த்தப்படும் விதம், என பல காரணிகள் அடைப்படையில் பெண்ணின் அனுபவம் அமையும். முதலிரவின் போது வலியை அல்லது அசவுகரியத்தை உணர்வது பொதுவாக இருப்பதுதான். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க, திருப்தியளிக்கும் முன்விளையாட்டுகள், கிளர்ச்சிகள் செய்வதன் மூலம், உடலுறவின் போது வலி ஏற்படுவதை பெருமளவு குறைக்க முடியும்.