Winter Breathing Problems: பனிக்காலத்தில் சுவாசப்பாதை தொற்று வராமல் இருக்க இதை பண்ணுங்க... விபரம் உள்ளே..!
குளிர்காலம் வரும் போது சுவாச பிரச்சனையும் கூட வே வரலாம். ஜலதோஷம், காய்ச்சல், சுவாச தொற்றுகள் என பரவக்கூடிய இக்கால கட்டத்தில் சுவாச தொற்றை தடுக்க அல்லது குறைக்க என்ன செய்யலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
டிசம்பர் 02, சென்னை (Health Tips): பனிகாலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சுவாச மண்டலமே. காலையில் மூக்கடைப்புடன் எந்திரித்தால் அந்த நாள் முழுவதும் நோயாளி போன்றே உணரவைக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் வருவதுடன் மூச்சு விடுவதில் சிரமமும் அதிகரிக்கும். குளிரான காற்று சுவாச பாதையில் செல்வதால் மூக்கடைப்பு, தொண்டைப் புண், நெஞ்சு சளி, நுரையீரல் சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. இதனாலேயே சுவாசித்தலில் சிக்கல் (Breathing Problem) நிலவுகிறது.
வாய் கொப்பளித்தல்:
இருமல், தொண்டை வறட்சி, புண் மற்றும் மூக்கடைப்பு இருக்கும்போது வெது வெதுப்பான நீரில் சிறிது கல் உப்பை போட்டு காலையில் எழுந்ததும் தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். இது தொண்டைப்புண் ஆறவும் சளியை வெளியேற்றவும் உதவுகிறது. காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடிக்க பழகிக் கொள்ளலாம்.
மூச்சுப்பயிற்சி:
தினமும் காலை மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது. பிராணாயாமம் செய்வது சுவாச மண்டலத்தை சீராக செயல்பட வைக்கும். அத்துடன் குளிர்காலத்தில் ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் மூச்சு விடுவதில் அதிக சிரமத்தை சந்திப்பர். அதிலிருந்து விடுபடுவதற்கு இந்தச் மூச்சுப்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். Meal Maker White Kurma Recipe: மீல் மேக்கர் வைத்து சுவையாக வெள்ளை குருமா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
நீராவி பிடித்தல்:
இம்முறை சுவாசப் பாதையில் உள்ள சளியையும் நுரையீரலில் உள்ள கிருமியையும் வெளியேற்ற சிறந்த வழியாகும். நெஞ்சு சளி, மூக்கடைப்பு இருப்பது போன்று தெரிந்தால் காலையில் அல்லது மாலையில் ஆவி பிடிக்கலாம். மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி, கற்பூரவள்ளி இவைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். அல்லது சுடு தண்ணீரில் ஆவி மாத்திரை அல்லது அரை ஸ்பூன் தைலம் போட்டு கலக்கி ஆவி பிடிக்கலாம்.அதிக நேரம் ஆவி பிடிக்க கூடாது. தலையில் நீர் கோர்த்திருந்தால் கூட இது நல்ல பலனளிக்கும்.
இஞ்சி:
இஞ்சி நுரையீரல் பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாகும். சளி, வறட்டு இருமல் இருந்தால் இஞ்சி சாற்றுடன் தேன் சேர்த்து சாப்பிடலாம். இது சளியை வெளியேற்றவும் தொண்டைப்புண்னை ஆற்றவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் இரவில் தூங்கும் முன் சாப்பிடக் கொடுக்கலாம்.
துளசி:
குளிர்காலத்தில் ஏற்படும் நோய்தொற்றுகளை போக்க துளசி மற்றும் தேன் உதவுகிறது. ஒரு டம்ளர் பாலில் இரண்டு ஸ்பூன் துளசி சாறுடன் சிறிது தேன் கலந்து குடித்து வரலாம். இது நமது உடலில் சளியை தேங்கவிடாது.
புகையை தவிருங்கள்:
புகைபிடித்தல் நுரையீரலை வெகுவாக பாதிக்கிறது. அதிலும் குளிர்காலத்தில் புகை பிடித்தால் மூச்சி திணறல், நுரையீரல் செயலிழப்பு வரை ஏற்படும். மேலும் அதிக மாசு உள்ள காற்றை சுவாசிக்காமல் தவிர்ப்பது நல்லது. வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)